ஹாங்காங் போராட்டத்தில் –  கவுன்சிலர் காதை கடித்து துப்பிய மர்மநபர்!

 

ஹாங்காங் போராட்டத்தில் –  கவுன்சிலர் காதை கடித்து துப்பிய மர்மநபர்!

ஹாங்காங் நாட்டில் நடைபெற்று வரும் போராட்டத்தின் நடுவே மர்மநபர் ஒருவர் கவுன்சிலரின் காதை கடித்து துப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவரை பிடித்து பொதுமக்கள் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

ஹாங்காங் நாட்டில் நடைபெற்று வரும் போராட்டத்தின் நடுவே மர்மநபர் ஒருவர் கவுன்சிலரின் காதை கடித்து துப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவரை பிடித்து பொதுமக்கள் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

ஹாங்காங் நாட்டில் தொடர்ந்து ஆறாவது மாதமாக சீன அரசை எதிர்த்து ஜனநாயக உரிமையை அளிக்க கோரி போராட்டம் நடைபெற்று வருகிறது. முக்கிய நகரங்களில் உள்ள பொது இடங்களான பூங்கா, ரயில் நிலையம், பஸ் நிலையம், வணிக வளாகம் என அனைத்து பகுதிகளிலும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

hong kong

நேற்றைய தினம் டாய் ஹு மாகாணத்தில் உள்ள வணிக வளாகத்தில் பொதுமக்கள் பலர் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அப்போது பொதுமக்களுக்குள் அமர்ந்திருந்த மர்ம நபர் ஒருவர் திடீரென எழுந்து மறைத்து வைத்திருந்த கத்தியை பொதுமக்கள் நோக்கி வீசத் துவங்கினார். அதில் இருவருக்கு பலத்த கத்திக்குத்து ஏற்பட்டது. நான்கு பெண்கள் படுகாயம் அடைந்தனர். இவர்களை உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக பொதுமக்கள் அனுப்பி வைத்தனர். 

அதேபோல் இந்த போராட்டத்தில் அப்பகுதி கவுன்சிலர் பங்கேற்றார். கவுன்சிலர் கத்திகுத்தில் ஈடுபட்ட மர்ம நபரை மடக்கிப் பிடித்து  தாக்குதலுக்கான காரணம் குறித்து கேட்ட போது, திடீரென மர்மநபர் கவுன்சிலரின் காதை கடித்து துப்பினார். வலியால் துடித்த கவுன்சிலரை மீட்டு பொதுமக்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மர்மநபரை தர்ம அடி அடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். 

கடந்த மாத இறுதியில் முக்கிய நகரின் பூங்கா அருகே நடைபெற்ற போராட்டத்தில் பொதுமக்களை கலைக்க காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டு வீசினர். அது வன்முறையாக வெடித்ததால், கட்டுக்குள் கொண்டுவர துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இந்தத் துப்பாக்கிச் சூட்டில் ஐந்து மாணவர்கள் உட்பட 40க்கும் மேற்பட்டோர் சுட்டுக் கொல்லப்பட்டது உலகையே அதிர வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

-vicky