ஹாங்காங்கில் முகமூடி அணிய தடை!

 

ஹாங்காங்கில் முகமூடி அணிய தடை!

ஹாங்காங்கில் அரசுக்கு எதிராக போராட்டம் வலுப்பெற்றுவரும் நிலையில் முகமூடிகள் அணிவதற்கு தடை விதித்து அந்நாட்டு தலைமை நிர்வாகி கேரி லாம் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

ஹாங்காங்கில் அரசுக்கு எதிராக போராட்டம் வலுப்பெற்றுவரும் நிலையில் முகமூடிகள் அணிவதற்கு தடை விதித்து அந்நாட்டு தலைமை நிர்வாகி கேரி லாம் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

ஹாங்காங் கைதிகளை சீனாவுக்கு நாடு கடத்தும் சட்டத்தை எதிர்த்து அந்நாட்டு மக்கள் கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர். வார இறுதிநாட்களில் நடைபெற்றுவந்த போராட்டங்கள் சீனாவின் தேசிய தினத்தன்று விஸ்வரூபம் எடுத்தது. போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த முடியாமல் திணறிய காவல்துறையினர் ஒரு மாணவரை துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதனால் போராட்டம் மீண்டும் தீவிரமடைய தொடங்கியது. போராட்டக்காரர்கள் மீதான காவல்துறையின் அடக்குமுறை குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும், சுட்டுக்கொல்லப்பட்ட மாணவனின் இறப்புக்குநீதி வேண்டும், சீன தலையீட்டை தவிர்க்க வேண்டும், ஹாங்காங் தலைவர் பதவி விலக வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளுடன் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன.

protest

போராட்டத்தில் ஈடுபடும் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் முகமூடி அணிந்தபடி போராட்டம் நடத்துவதையும், பேரணியை நடத்துவதையும் வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நிலையில் காலனித்துவ கால அவசரகால சட்டத்தின் மூலம் முகமூடிகள் அணிய தடை விதித்து தலைமை நிர்வாகி கேரி லாம் உத்தரவிட்டுள்ளார். 

காவலர்களுக்கு அடையாளம் தெரிந்துவிடக்கூடாது என அந்நாட்டு மக்கள் முகமூடி அணிந்து போராடிவருகின்றனர். இந்நிலையில் இத்தகைய உத்தரவு அந்நாட்டு மக்களிடையே மேலும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. முகமூடி அணிய தடை விதித்ததற்கு எதிராக தற்போது போரட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.