ஹலோ போலீஸா…சரக்கு எப்போ சார் வாங்கிட்டு வருவீங்க: 100க்கு போன்செய்து அலப்பறை செய்த இளைஞர்!

 

ஹலோ போலீஸா…சரக்கு எப்போ சார் வாங்கிட்டு வருவீங்க: 100க்கு போன்செய்து அலப்பறை செய்த இளைஞர்!

சச்சின் சில நாட்களுக்கு முன்பு குடிபோதையில்  போலீஸ் அவசர எண் 100க்கு போன் செய்துள்ளார்.

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள கோடார் பகுதியைச் சேர்ந்தவர் உமா ஷங்கர். இவர் அந்த ஊரில் மதுக்கடை நடத்தி வருகிறார். இவரது மகன் சச்சின். சச்சின் சில நாட்களுக்கு முன்பு குடிபோதையில்  போலீஸ் அவசர எண் 100க்கு போன் செய்துள்ளார்.

ttn

அப்போது போலீசாரிடம், அவசர உதவி தானே என்று கேட்க, ஆம் சொல்லுங்கள் எங்கிருந்து பேசுறீர்கள் என்று மறுமுனையில் போலீஸ் ஒருவர் கேட்க, எனக்கு மதுபாட்டில் வேண்டும், வாங்கி வாருங்கள். எங்கள் ஊரில் தாத்தாவும் அப்பாவும் தான் மதுக்கடை வைத்திருக்கிறார்கள். ஆனால் எனக்கு மது தர மறுக்கிறார்கள். நீங்கள் எனக்கு மது வாங்கி கொண்டு வாருங்கள்’ என்று கூறி அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

ttn

இதையடுத்து அந்த நம்பரை வைத்து டிராக் செய்த போலீசார், உமாசங்கர் மகன் சச்சினை கண்டுபிடித்து விசாரணை செய்து வருகின்றனர். போலீசையே மதுவாங்கிவர சொன்ன சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.