ஹலோ, அ’யம் கிரேட் கிரேட் கிராண்ட் டாட்டர் ஆஃப் லார்ட் ராமா ஸ்பீக்கிங்!

 

ஹலோ, அ’யம் கிரேட் கிரேட் கிராண்ட் டாட்டர் ஆஃப் லார்ட் ராமா ஸ்பீக்கிங்!

”சரி இதுல யாரு முதல் பேரன்” என்ற கேள்வியோடு தியா குமாரியின் உரிமைகோரலுக்கு இரண்டு நாட்களுக்குப் பிறகு இன்னொருவரும் வாரிசு உரிமை கோருகிறார். அவரும் ராஜஸ்தானைச் சேர்ந்த ராஜவம்சம்தான். மேவார்-உதய்பூர் ராஜவம்சத்தைச்,சேர்ந்த மஹேந்திர சிங்கும் தன்னை ராமரின் நேரடி வாரிசாக உரிமை கோரியிருக்கிறார்.

அயோத்தியில்தான் ராமர் பிறந்தார் என்பதற்கான ஆதாரம் என்ன, ராமனின் வாரிசுகள் யாரேனும் இப்போழுதும் உள்ளனரா என உச்சநீதிமன்றம் எழுப்பிய கேள்விக்கு ஒவ்வொரு பதிலாக வந்துகொண்டிருக்கிறது. ராஜஸ்தானின் ராஜஸ்மந்த் நாடாளுமன்ற தொகுதியில் இருந்து பிஜேபி எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் தியா குமாரி தன்னை ராமரின் வாரிசு வழிவந்தவர் என உரிமை கோரியிருக்கிறார். ராமனின் இரட்டை குழந்தைகளில் மூத்தவரான குசனின் வாரிசு தாம் என்பதற்கு தங்கள் அரண்மனையில் இருக்கும் வழித்தோன்றல்கள் அதாவது Family Tree ஆவணத்தை காட்டுகிறார். இந்த ஆவணத்தின்படி, தசரதர் 62ஆவது இடத்திலும், ராமர் 63வது இடத்திலும், குசா 64வது இடத்திலும் இருப்பதாகவும், நீதிமன்றம் கேட்டுக்கொண்டால் அவற்றை சமர்பிக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Ram Sita with their children Luv - Kush

”சரி இதுல யாரு முதல் பேரன்” என்ற கேள்வியோடு தியா குமாரியின் உரிமைகோரலுக்கு இரண்டு நாட்களுக்குப் பிறகு இன்னொருவரும் வாரிசு உரிமை கோருகிறார். அவரும் ராஜஸ்தானைச் சேர்ந்த ராஜவம்சம்தான். மேவார்-உதய்பூர் ராஜவம்சத்தைச்,சேர்ந்த மஹேந்திர சிங்கும் தன்னை ராமரின் நேரடி வாரிசாக உரிமை கோரியிருக்கிறார். ”ராமரின் நேரடி வாரிசு யாரேனும் இருக்கீங்களான்னு ஏதோ சுப்ரீம் கோர்ட் கேட்டுச்சாமே, தோ வந்துட்டேன் யுவரானர்” என அட்டெண்டன்ஸ் குடுத்திருக்கிறார். நம் சந்தேகம் எல்லாம் என்னவென்றால், கடவுள் ராமரின் நேரடி வாரிசுகளான இவர்கள் இத்தனை நாட்கள் ஏன் இதனை மறைத்தார்கள்? எத்தனை கலவரங்கள் நடந்து எத்தனை மரணங்கள் நிகழ்ந்தும் தங்களிடம் இருந்த ஆதாரங்களை முன்வைத்து அயோத்தியில்தான் ராமர் பிறந்தார் என்பதை நிறுவ ஏன் முயலவில்லை? சரி அதைகூட விடுங்கள். ராமரின் நேரடி வாரிசு என்பது எவ்வளவு பெரிய மகத்தான பெருமைக்குரிய செய்தி! அதைகூடவே வெளியுலகத்துக்கு மறைத்துக்கொண்டு வாழ்வார்கள்? நீதிமன்றம் கேட்டதும் தானாக முன்வரும் இருவருக்குமுள்ள பாஜக நெருக்கம்தான் காரணமா? அப்படி என்றால் கடவுள் பெயரால் என்ன பொய் சொல்லவும் தயங்க மாட்டார்களா? நீதிமன்றம் இவர்கள் தரும் ஆவணங்களை பரிசீலித்து உண்மையை விளக்குமா? ராமனின் மூத்தமகனான குசனின் பிள்ளைகள் மட்டும் வந்திருக்கிறார்கள், பங்காளி லவாவின் பிள்ளைகள் எங்கே? ராமருக்கே வெளிச்சம்!