ஹலீம் சாப்பிட்டு இருக்கீங்களா?..ஆக்ஸ்சுவலா இதுதான் உண்மையான கறிக்கஞ்சி!

ஹலீம் சாப்பிட்டு இருக்கீங்களா?..ஆக்ஸ்சுவலா இதுதான் உண்மையான கறிக்கஞ்சி!

ஹலீம்,நெடிய சரித்திரங்கொண்டது.இதை பெர்ஷியாவிலிருந்து இந்தியாவுக்கு கொண்டு வந்தவர்கள் இஸ்லாமியர்.ஆனால் டெல்லியை விட ஹைதராபாத் நகரம்தான் ஹலீமுக்கு தலைநகரம் ஆகி இருக்கிறது.இந்த ஹலீம் தயாரிக்க 8 மணி நேரம் தேவைப்படும்.இதற்கே அதிர்ச்சியடைந்தால் எப்படி? இன்னும் நிறைய அதிர்ச்சிகள் இருக்கின்றன வாருங்கள்.

haleem

கனமான பாத்திரம் ஒன்றை அடுப்பில் ஏற்றுகிறார்கள்.அது ஒரு இருநூறு லிட்டர் தண்ணீர் கொள்ளுமளவுக்கு பெரியதாக இருக்கிறது.அதில் முதலில் பாதியளவுக்கு நீர் விட்டு கொதிக்க விடுகிறார்கள். கொதிவந்ததும் கொழுப்பில்லாத கறியை எலும்போடு சேர்த்தே வெட்டி ஒரு 10 கிலோ அதற்குள் போட்டு,கூடவே ஒரு கிலோ பச்சை மிளகாயையும் போட்டு ( ஹைதராபாத் ஆந்திராவின் தலை நகரம்,நினைவிருக்கிறதா ) அதை ஒரு 5 மணி நேரம் வேக விடுகிறார்கள்.

haleem

அதன்பிறகு உளுந்தம் பருப்பு,துவரம்பருப்பு,கடலைப் பருப்பு,முந்திரி,பாதாம், உடைத்த கோதுமை சேர்த்து மீண்டும் ஒரு இரண்டு மணி நேரம் மூடி விட்டு விடுகிறார்கள்.அதன்பிறகுதான் கிளைமாக்ஸ். இப்போது மீண்டும் அதை திறந்து ஆறடி உயரமும் ஒரு முனையில் மரச்சுத்தியல் போன்ற இனைப்பும் கொண்ட பிரம்மாண்ட மத்துக்களை ஆளுக்கு ஒன்றாக இரண்டு பேர் எடுத்துக்கொண்டு வந்து நிற்க…நெய்,மல்லி இலை,பட்டை,கிராம்பு,போன்ற கறிமசாலா பொருட்களை சேர்த்து ,அந்த பெரிய மத்துக்களைக் கொண்டு இடித்து கிளறுகிறார்கள்.

இந்தப் பிராசசில் கறி எலும்பு,பட்டை கிராம்பு,பருப்பு வகைகள் கோதுமை எல்லாம் இரண்டறக் கலந்தது கிட்டத்தட்ட அல்வா பதத்துக்கு வந்ததும் அதை கிண்ணங்களில் அள்ளி போட்டு வெங்காயம் தூவி தருகிறார்கள்
அப்படியே சாப்பிடலாம்.

halim

இது இந்திய ஹலீம்.நீங்கள் துபாய்க்கோ கராச்சிக்கோ போனால் இதை ரொட்டியுடன் பரிமாறுகிறார்கள். அங்கே கோதுமை ,க.பருப்பு,உ.பருப்பு, து. பருப்பெல்லாம் சேர்ப்பதில்லை.இப்போது சென்னை ராயப்பேட்டையிலும் கிடைக்கிறதாம்.உடனே கிளம்புங்கள்.ரம்ஸான் முடிந்து விட்டால் கிடைக்காது.