ஹரியானாவில் சுய ஊரடங்கை கடைபிடிக்காதவர்களை வீட்டுக்கு அடித்து விரட்டிய போலீசார் – வைரல் வீடியோ

 

ஹரியானாவில் சுய ஊரடங்கை கடைபிடிக்காதவர்களை வீட்டுக்கு அடித்து விரட்டிய போலீசார் – வைரல் வீடியோ

சுய ஊரடங்கை கடைபிடிக்காதவர்களை ஹரியானா மாநில போலீசார் அவர்களை அடித்து வீட்டுக்கு விரட்டியுள்ளனர்.

சண்டிகர்: சுய ஊரடங்கை கடைபிடிக்காதவர்களை ஹரியானா மாநில போலீசார் அவர்களை அடித்து வீட்டுக்கு விரட்டியுள்ளனர்.

கொரோனா வைரஸ் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதையடுத்து கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் நோக்கில் இன்று காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மக்கள் ஊரடங்கை கடைபிடிக்க வேண்டும் என பிரதமர் மோடி அண்மையில் அழைப்பு விடுத்தார். அதையடுத்து இன்று பிரதமர் மோடியின் அழைப்புக்கு பணிந்த இந்திய மக்கள் ஊரடங்கு உத்தரவை கடைபிடித்து வருகின்றனர்.

இதனால் நாட்டின் தேசிய சாலைகள், நகர சாலைகள், கிராம தெருக்கள் உட்பட அனைத்து சாலைகளும் வெறிச்சோடி காணப்படுகிறது. கடைகளும் விடுமுறை அறிவித்து விட்டன. ஆனால் நாட்டில் உள்ள முக்கியமான நகரங்களில் சில பேர் ஊரடங்கை கடைபிடிக்காமல் ஆங்காங்கே சுற்றித் திரிந்து வருகின்றனர். இந்த நிலையில், ஹரியானா மாநிலத்தில் இவ்வாறு ஊர் சுற்றிக் கொண்டிருந்தவர்களை போலீசார் அடித்து வீட்டுக்கு விரட்டி விட்டனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.