ஸ்லீவ் டிரஸ், மூக்குத்தி: மிஸ் இந்தியா டீசரில் கெத்து காட்டிய கீர்த்தி சுரேஷ்

 

ஸ்லீவ் டிரஸ், மூக்குத்தி: மிஸ் இந்தியா டீசரில் கெத்து காட்டிய கீர்த்தி சுரேஷ்

நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகிவரும் மிஸ் இந்தியா படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது. 

சென்னை: நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகிவரும் மிஸ் இந்தியா படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது. 

தமிழ் சினிமாவில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களைத் தேர்வு செய்து நடித்து வரும் ஹீரோயினிகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தைக் கச்சிதமாக நடித்து தனக்கு என்று ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான  மஹாநடி படத்திற்காகச் சிறந்த நடிகை என்ற தேசிய விருதைத் தட்டி சென்றார். 

இந்த நிலையில் இவர் தற்போது தெலுங்கில் அறிமுக இயக்குநர் நரேந்திரா நாத் இயக்கும் புது படத்தில் நடித்து வருகிறார். ஈஸ்ட் கோஸ்ட் நிறுவன தயாரிப்பில்  உருவாகும் இந்த படம் கீர்த்தி சுரேஷின் 20 வது படமாகும்.  முழுக்க முழுக்க கதாநாயகியை மையப்படுத்தி உருவாகிவரும் இந்த படத்திற்கு”மிஸ் இந்தியா என்று பெயர் வைத்துள்ளனர்.   தற்போது படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது. 

அதில் முதலில் ஹோம்லியாக வரும் கீர்த்தி சுரேஷ் பின்னர் ஸ்லீவ் டிரஸ், மூக்குத்தி என்று அசத்தலாக வந்து பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். மேலும் இந்த படத்தின் கூடுதல் அப்டேட் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.