ஸ்ரீரங்கம் கோயிலில் தாயார் டோலோற்சவம் 10-ம் தேதி தொடங்குகிறது

 

ஸ்ரீரங்கம் கோயிலில் தாயார் டோலோற்சவம் 10-ம் தேதி தொடங்குகிறது

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் ஸ்ரீரெங்கநாச்சியார் ஊஞ்சல் திருநாள் என்றழைக்கபடும் டோலோற்சவம் நாளை தொடங்கி வருகிற 16-ந்தேதி வரை நடைபெறுகிறது.

வைணவ ஸ்தலங்களில் மிக முக்கிய ஸ்தலமாகவும், 108 திவ்ய தேசங்களில் முதல் ஸ்தலாமகவும், பூலோக வைகுண்டம் என்றழைக்கப்டும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் ஐப்பசி மாதத்தில்  ஸ்ரீரெங்கநாச்சியாருக்கு  டோலோற்சவம்  நடைபெறுவது வழக்கம்

srirangam

இந்தாண்டிற்கான டோலோற்சவம் நாளை தொடங்கி வருகிற நவம்பர் மாதம் 16 ஆம் தேதி வெள்ளிக்கிழமை வரை நடைபெறுகிறது. ஸ்ரீரங்கத்தில் இந்த டோலோற்சவ விழா ஒவ்வொரு ஆண்டும் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.

அதே போல் இந்தாண்டிற்கான டோலோற்சவத்தினை முன்னிட்டு ஸ்ரீரெங்க நாச்சியார் 10 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை தினமும் மாலை 5.30 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு 6 மணிக்கு ஊஞ்சல் மண்டபம் வந்து சேருகிறார்.

srirangam

இரவு 7 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் ஆரம்பமாகி 8 மணிக்கு நிறைவு பெறும். 8.45 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு 9 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார். 

ஊஞ்சல் திருநாள் நடைபெறும் நாட்களில் தாயார் சன்னதி வளாகத்தினுள் பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள ஊஞ்சலில் தாயார் எழுந்தருளி தீபாராதனை பூஜை நடைபெறுகிறது.

தினமும் மாலை 3 மணி முதல் மாலை 5 மணி வரை தாயார் மூலஸ்தான சேவை நடைபெறுவதில்லை என கோயில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

srirangam

இந்த தகவலை கோவில் இணை ஆணையர் மற்றும் செயல் அலுவலர் ஜெயராமன் ஆகியோர் தெரிவித்து உள்ளனர்.