ஸ்மார்ட் சிட்டி திட்டத்தால் இன்றோடு மதுரையிலிருந்து விடைபெறும் ராணி மங்கம்மாளால் உருவாக்கப்பட்ட ‘தமுக்கம் மைதானம்’!

 

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தால் இன்றோடு மதுரையிலிருந்து விடைபெறும் ராணி மங்கம்மாளால் உருவாக்கப்பட்ட ‘தமுக்கம் மைதானம்’!

கிபி 1670 ஆம் ஆண்டு ராணி மங்கம்மாள் வீர விளையாட்டுகளை ரசிப்பதற்காகக் கட்டப்பட்ட தமுக்கம் மைதானம் மதுரையின் முக்கிய அடையாளங்களுள் ஒன்று.

கிபி 1670 ஆம் ஆண்டு ராணி மங்கம்மாள் வீர விளையாட்டுகளை ரசிப்பதற்காகக் கட்டப்பட்ட தமுக்கம் மைதானம் மதுரையின் முக்கிய அடையாளங்களுள் ஒன்று. அந்த மைதானம் கடந்த 1959 ஆம் ஆண்டு காந்தி அருங்காட்சியகம் ஆக மாற்றப்பட்டது. ராணி மங்கம்மாளால் கட்டப்பட்ட அந்த மைதானம் இப்போது அதே பேரில் மதுரை மாநகாட்சியின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. அங்கு ஆண்டுதோறும் சித்திரை கண்காட்சி, புத்தகக் கண்காட்சி நடத்தப்படும்.

ttn

நூற்றுக்கணக்கான ஆண்டுகள் சிறப்பு வாய்ந்த இந்த மைதானத்தில் தான் மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர் தலைமையில்  உலக தமிழ் மாநாடும், ஜல்லிக்கட்டு போராட்டமும் நடந்தது. இப்படிப் பல புகழ்களை ஏந்திக் கொண்டிருக்கும் தமுக்கம் மைதானம் இன்று மதுரைக்கு விடைகொடுக்கிறது. மொத்தமாக 9.68 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த மைதானத்தில் ஒரு கலையரங்கம் இருப்பதால், அதில் எஞ்சியுள்ள 4.08 ஏக்கரில் நவீன கூட்ட அரங்கு ரூ.45.6 கோடி பட்ஜெட்டில்  கட்டப்பட உள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம் கட்டப்படும் இந்த அரங்கத்தின் பணிகள் நாளை முதல் தொடங்க உள்ளது. 

ttn

மீனாட்சி அம்மன் கோவில் வடிவில் அமைக்கப்பட உள்ள இந்த அரங்கத்தில் 7 கூட்ட அரங்குகள், பெரிய உணவுக்கூடம், 250 கார் நிறுத்த இடம் என பல வசதிகள் செய்யப்பட உள்ளதாம். இன்று நடைபெறும் முதல்வர் கோப்பை கபடிப் போட்டி தான் இந்த மைதானத்தில் நடக்கவுள்ள கடைசி நிகழ்வாகும்.  6.48 கோடி வருவாய் கிடைக்கும் என்பதற்காக, மதுரையின் அடையாளமாக விளங்கும் இந்த தமுக்கம் மைதானம் நவீன கட்டிடமாக மாற்றப்பட உள்ளது மக்களிடையே பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரையில் பல இடங்கள் இருப்பினும், இந்த இடம் தேர்ந்தெடுக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.