ஸ்பேனர் சின்னத்துக்குப் பதிலாக அச்சடிக்கப்பட்ட ஸ்க்ரூ சின்னம்.. 3 ஊராட்சிகளில் மறுவாக்குப்பதிவு!

 

ஸ்பேனர் சின்னத்துக்குப் பதிலாக அச்சடிக்கப்பட்ட ஸ்க்ரூ சின்னம்.. 3 ஊராட்சிகளில் மறுவாக்குப்பதிவு!

காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு சில இடங்களில் மாலை 5 மணியைக் கடந்தும் நடைபெற்றது.

ஊரக உள்ளாட்சித் தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. அதே போல, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கறம்பக்குடி, குன்னாண்டார் கோயில், விராலி மலைப் பகுதிகளிலும் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. புதுக்கோட்டையில் மாலை 4 மணியளவில் 71% சதவீதம் வாக்குப்பதிவு ஆனது. காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு சில இடங்களில் மாலை 5 மணியைக் கடந்தும் நடைபெற்றது. சில வாக்குச்சாவடிகளில் பிரச்சனை ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.  

ttn

புதுக்கோட்டை மாவட்டம் விராலி மலைப்  பகுதிக்கு உட்பட்ட கோங்குடிபட்ட, பாக்குடி, பேரம்பூர் ஆகிய 3 ஊராட்சிகளிலும்  15வது வார்டு ஒன்றிய உறுப்பினர் பதவிக்கு சேகர் என்பவர் சுயேச்சையாக போட்டியிட்டார். அவருக்கு ஸ்பேனர் சின்னம் வழங்கப்பட்டது. ஆனால், வாக்கு சீட்டில் தவறாக ஸ்க்ரூ சின்னம் அச்சடிக்கப்பட்டுள்ளது. இதனால், அங்கு நடந்த வாக்குப்பதிவில் குழப்பம் ஏற்பட்டது. இது குறித்து வேட்பாளர் சேகர், தேர்தல் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார். 

ttn

இதனையடுத்து சேகர் போட்டியிட்ட 3 ஊராட்சிகளிலும் உள்ள 13 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்த மறுவாக்குப்பதிவு, இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறும் நாளன்றே, அதாவது 30 ஆம் தேதி நடைபெற உள்ளது.