ஸ்பாட் ஃபைன் வசூலிப்பதில் முறைகேடு : போக்குவரத்து காவலர் சஸ்பெண்ட் !

 

ஸ்பாட் ஃபைன் வசூலிப்பதில் முறைகேடு : போக்குவரத்து காவலர் சஸ்பெண்ட் !

போக்குவரத்து உதவி ஆய்வாளர் கோவிந்தராஜ், சேலம் சுந்தர லாட்ஜ் பஸ் ஸ்டாப் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளார்.

புதிய மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு வந்ததில் இருந்து, வாகன சோதனை தீவிர படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, போக்குவரத்து விதிகளை மீறுபவர்களிடம் உடனடியாக அபராத தொகையைப் பெறுவதற்கு ஸ்பாட் ஃபைன் திட்டம் அமலில் உள்ளது. போக்குவரத்து உதவி ஆய்வாளர் கோவிந்தராஜ், சேலம் சுந்தர லாட்ஜ் பஸ் ஸ்டாப் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளார். அப்போது அந்த வழியே வந்த ஒரு நபரிடம்  ஸ்பாட் ஃபைன் மூலம் அபராதம் செலுத்தும் படி கூறியுள்ளார். அந்த நபரும் அபராதம் செலுத்தியுள்ளார்.  

ttn

ஆனால், அபராதத்தை வாங்கிக் கொண்ட கோவிந்தராஜ் அபராதம் செலுத்தவில்லை என்று ரசீதைக் கொடுத்துள்ளார். அதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த வாகன ஓட்டி கோவிந்தராஜிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

tttn

இதனை அவருடன் சென்ற நண்பர்கள் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் போட்டுள்ளனர். இது தொடர்பாகப் புகார் எழுந்ததால், கோவிந்தராஜை ஆயுதப்படைக்கு மாற்றி சேலம் மாவட்ட காவல் ஆணையர் செந்தில் குமார் உத்தரவிட்டுள்ளார். மேலும், கோவிந்தராஜை பணியிடை நீக்கமும் செய்துள்ளார்.