ஸ்னாப்டிராகன் 626 பிராசஸர் கொண்ட விவோ ஒய்89 ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகம்

 

ஸ்னாப்டிராகன் 626 பிராசஸர் கொண்ட விவோ ஒய்89 ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகம்

சீனாவில் விவோ ஒய்89 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பெய்ஜிங்: சீனாவில் விவோ ஒய்89 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

விவோ நிறுவனம் சத்தமே இல்லாமல் சீனாவில் தனது விவோ ஒய்89 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. அலிஎக்ஸ்பிரஸ்.காம் இணையதளத்தில் அந்நாட்டில் இந்த புதிய மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விவோ இசட்3ஐ மாடலை தொடர்ந்து இந்த புதிய ஸ்மார்ட்போனை விவோ நிறுவனம் சீனாவில் கொண்டு வந்துள்ளது. கூடிய விரைவில் இந்தியா உட்பட மற்ற நாடுகளில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அரோரா புளு மற்றும் பிளாக் கோல்டு நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் தயாரிக்கப்பட்டுள்ளது. சீனாவில் இதன் விலை 1396 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.14,660) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனில் 6.26 இன்ச் ஃபுல் ஹெச்.டி டிஸ்பிளே, ஸ்னாப்டிராகன் 626 பிராசஸர், 4 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி, டூயல் சிம் ஸ்லாட், ஃபன்டச் ஓ.எஸ். 4.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம், 16 எம்.பி + 2 எம்.பி இரட்டை பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், 16 எம்.பி செல்ஃபி கேமரா, விரல்ரேகை சென்சார், 4ஜி வோல்ட்இ, வைஃபை, ப்ளூடூத், 3260 எம்.ஏ.ஹெச். பேட்டரி ஆகிய சிறப்பம்சங்கள் இடம்பிடித்துள்ளன.