ஸ்டைன் இல்லாமல் களமிறங்கும் தென் ஆப்ரிக்கா; ரசிகர்கள் கவலை !!

ஸ்டைன் இல்லாமல் களமிறங்கும் தென் ஆப்ரிக்கா; ரசிகர்கள் கவலை !!

காயத்தில் இருந்து முழுமையாக குணமடையாத டேல் ஸ்டைன் இங்கிலாந்து அணியுடனான நாளைய போட்டியில் விளையாட மாட்டார் என தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. 
நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நாளை இங்கிலாந்தில் துவங்க உள்ளது. 

steyn

இங்கிலாந்தின் ஓவல் மைதானத்தில் நாளை நடைபெறும் முதல் போட்டியில் தென் ஆப்ரிக்கா அணியும் இங்கிலாந்து அணியும் மோத உள்ளன. 
ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் நாளைய போட்டியை காண ஆவலுடன் காத்துள்ள நிலையில், தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் ரசிகர்கள் மட்டும் கவலையுடன் காத்திருக்கும் நிலை டேல் ஸ்டைனால் ஏற்பட்டுள்ளது. 
ஆம்., தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணியின் மிக முக்கிய வீரர்களில் ஒருவராக கருதப்பட்ட அசுர வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டைன், கடந்த மாதம் ஏற்பட்ட காயத்தில் இருந்து முழுமையாக குணமடையாததால் அவர் இங்கிலாந்து அணியுடனான முதல் போட்டியில் விளையாட மாட்டார் என தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. 
தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களில் ஒருவராக பார்க்கப்பட்ட ஸ்டைன் காயத்தால் அவதிப்பட்டு வருவது தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் ரசிகர்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.