ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்துக்கு நிரந்தரத் தீர்வு வேண்டி திமுக வெளிநடப்பு

 

ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்துக்கு நிரந்தரத் தீர்வு வேண்டி திமுக வெளிநடப்பு

ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் நிரந்தரத் தீர்வு காண வலியுறுத்தி சட்டப்பேரவையில் இருந்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

சென்னை: ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் நிரந்தரத் தீர்வு காண வலியுறுத்தி சட்டப்பேரவையில் இருந்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

சட்டப்பேரவையில் நேற்று பேசிய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க முடியாத வகையில் தமிழக அமைச்சரவை கூடி கொள்கை முடிவை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

அதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் தங்கமணி, ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதில்லை என்ற முடிவில் தமிழக அரசு தெளிவாக இருப்பதாக விளக்கம் அளித்திருந்தார்.

இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கு மத்திய பசுமை தீர்ப்பாயம் வழங்கிய அனுமதி செல்லும் என உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழிங்கியுள்ளது.

இந்நிலையில், உடனடியாக அமைச்சரவையை கூட்டி அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக அவசர ஆலோசனை நடத்த வேண்டும் என ஸ்டாலின் இன்று மீண்டும் வலியுறுத்திப் பேசினார்.

ஆனால், ஸ்டாலினின் பேச்சுக்கு சபாநாயகர் தனபால் அனுமதி வழங்கவில்லை. இதை கண்டித்து மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் திடமான கொள்கை முடிவு எடுப்பதற்காக அமைச்சரவை கூட்டத்தை நடத்தி ஆலோசிக்க வேண்டும் என்று முதல்வரை நான் வலியுறுத்தினேன். ஆனால் எதுவுமே நடக்காததால் தமிழக அரசின் போக்கிற்கு கண்டனம் தெரிவித்து நாங்கள் வெளிநடப்பு செய்தோம் என விளக்கம் அளித்துள்ளார்.