ஸ்டெர்லைட் ஆலை திறப்புக்கு எதிராக போராட்டம் தொடரும்: சீமான் அதிரடி

 

ஸ்டெர்லைட் ஆலை திறப்புக்கு எதிராக போராட்டம் தொடரும்: சீமான் அதிரடி

ஸ்டெர்லைட் ஆலையை திறக்கவிடாமல் தொடர்ந்து போராட்டம் நடத்தப்படும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

சென்னை: ஸ்டெர்லைட் ஆலையை திறக்கவிடாமல் தொடர்ந்து போராட்டம் நடத்தப்படும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கலாம் என்ற தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவு, தூத்துக்குடி நகரில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, மீண்டும் தூத்துக்குடியில் போராட்டங்கள் ஏற்படலாம் என்பதால், மாவட்டம் முழுவதும் இன்று பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய சீமான், “ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் எல்லாமே திட்டமிட்டு நடத்தப்பட்டது. மூடப்பட்ட ஆலையைத் திறக்க வேண்டும் என பசுமை தீர்ப்பாயம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

sterlite

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுக்கு உத்தரவிடும் அளவிற்கு பசுமை தீர்ப்பாயம் அவ்வளவு வலிமை மிக்க அமைப்பா? மக்களின் எதிர்கால வாழ்விற்கு அக்கறை காட்டாமல் 3 வாரத்திற்குள் ஆலையைத் திறக்க வேண்டும் என்று பசுமை தீர்ப்பாயம் கூறுகிறது. ஸ்டெர்லைட் ஆலையில் தயாரிக்கப்படும் தாமிரத்துக்கு அவ்வளவு தட்டுபாடு என்றால் குஜராத்தில் ஆலையை  திறக்க வேண்டியதானே?

தாமிர தட்டுப்பாட்டை பற்றிப் பேசுபவர்கள் 2020-ல் தூத்துக்குடி நிலத்தில் ஒரு சொட்டு நீர்கூட இருக்காது என்று கூறுவதைப் பற்றி சிந்திக்காதது ஏன்? நீரை சேமிக்க என்ன திட்டம் உள்ளது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தொடர்ந்து போராட்டம் நடத்தப்படும்” என தெரிவித்துள்ளார்.