ஸ்டெர்லைட் ஆலை எந்த மாசுவையும் ஏற்படுத்தவில்லை! ஆலையை மூட முடியாது- வேதாந்தா நிறுவனம் திட்டவட்டம்

ஸ்டெர்லைட் ஆலை எந்த மாசுவையும் ஏற்படுத்தவில்லை! ஆலையை மூட முடியாது- வேதாந்தா நிறுவனம் திட்டவட்டம்

ஸ்டெர்லைட் மாசு ஏற்படுத்தியதற்கு எந்த ஆதாரமும் இல்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் வாதிட்டுள்ளது. 

ஸ்டெர்லைட் மாசு ஏற்படுத்தியதற்கு எந்த ஆதாரமும் இல்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் வாதிட்டுள்ளது. 

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரும் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மனுவில், மாசு ஏற்படுத்தியதற்கு ஆதாரம் எதுவும் இல்லாதபோது ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட முடியாது.  மாசு ஏற்படுத்தியிருந்தாலும் ஆலையை மூடுவது தீர்வாக அமையாது. காற்று, நிலத்தடி நீர் மாசு கட்டுப்பாட்டில் உள்ளதை அரசு மறைக்கிறது என்றும் வேதாந்தா உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது

தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் 67 ஆலைகள் இருக்கும்போது ஸ்டெர்லைட் மீது மட்டும் நடவடிக்கை ஏன்? என வேதாந்தா நிறுவனம் வாதிட்டுள்ளது. துப்பாக்கி சூடு சம்பவம் தவிர ஆலையை மூட வேறு எந்த காரணமும் இல்லை என்றும் வேதாந்தா நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக்கோரி வேதாந்தா தொடர்ந்த வழக்கை ஜூலை 4ஆம் தேதிக்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.