ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்ச நீதிமன்றம் அனுமதி

 

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்ச நீதிமன்றம் அனுமதி

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கலாம் என உச்ச நீதிமன்றம் அனுமதியளித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.

டெல்லி: ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கலாம் என உச்ச நீதிமன்றம் அனுமதியளித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.

தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த மே மாதம் போராட்டம் நடைபெற்றது. அப்போது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.அந்த போராட்டத்துக்கு பின்னர், ஆலைக்கு சீல் வைத்து மூடி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.

இதனைத் தொடர்ந்து, ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு மூடியதற்கு எதிராக வேந்தாந்தா நிறுவனம், தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் முறையீடு செய்தது. வழக்கை விசாரித்த  தேசிய பசுமை தீர்ப்பாயம், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டது. இதையடுத்து, ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி அளித்ததை எதிர்த்து தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது.

அதன்படி, ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உத்தரவிட்ட தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.இந்த மேல்முறையீட்டை விசாரித்த நீதிமன்றம், ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கலாம் என அனுமதி அளித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு தமிழக அரசுக்கு மிகப்பெரிய பின்னடைவு என எதிர்க்கட்சியினர் உட்பட பல்வேறு தரப்பினர் கூறி வருகின்றனர். ஆனால் இந்த தீர்ப்பு குறித்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.