ஸ்டாலின் தான் இனிமேல் எங்களுக்கு கலைஞர், பேராசிரியர்- துரைமுருகன்!

ஸ்டாலின் தான் இனிமேல் எங்களுக்கு கலைஞர், பேராசிரியர்- துரைமுருகன்!

சென்னை அண்ணா அறிவாலயத்தில் மறைந்த முன்னாள் அமைச்சர் க.அன்பழகனின் படத்தை மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். பேராசிரியர் க.அன்பழகன் உருவப்படம் திறப்பு விழாவில் துரைமுருகன், கே.எஸ்.அழகிரி, கி.வீரமணி, வைகோ, கே.பாலகிருஷ்ணன், முத்தரசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

durai murugan

விழாவில் பேசிய துரைமுருகன், “எங்கள் இதயத்தின் சுமை இரங்கவில்லை. இரட்டை கோபுரமாக கலைஞரும் பேராசிரியரும் இருந்தார்கள். இங்குள்ள தலைவர்கள் எங்கள் தலைவருக்கு ஆதரவாக பேசியது இதய சுமை குறைந்து போல் இருக்கிறது. பொதுக்குழுவில் பேராசிரியர் பேசிய பேச்சுகள் பலரின் அமைச்சர் பதவியை பறித்து இருக்கிறது. அவரின் பேச்சுக்கு யாரும் எதிர்ச்சொல் கூற முடியாது. அவர் பொதுச்செயலாளராக இருந்த 43 ஆண்டுகளில் அவருக்கும் கலைஞருக்கும் எந்த கருத்து மாறுபாடும் ஏற்படவில்லை. இனிமேல் ஸ்டாலின் தான் எங்களுக்கு கலைஞர், பேராசிரியர்” என தெரிவித்துள்ளார்.