‘ஸ்டாலினுக்கு துணிச்சல் இல்லை’ – தமிழிசை காட்டம்

 

‘ஸ்டாலினுக்கு துணிச்சல் இல்லை’ – தமிழிசை காட்டம்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு துணிச்சல் இல்லை என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

திருச்சி: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு துணிச்சல் இல்லை என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

திமுகவிற்கு மதிமுக தோழமை கட்சி மட்டுமே தவிர, கூட்டணி கட்சி அல்ல என திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்த கருத்து, தமிழக அரசியலுக்குள் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.

அதனையடுத்து, விசிக தலைவர் திருமாவளவனும், மதிமுக பொது செயலாளர் வைகோவும் அடுத்தடுத்த நாட்கள் தனித் தனியே அண்ணா அறிவாலயம் சென்று திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து பேசிவிட்டு வந்தனர். திமுக கூட்டணிக்குள் உருவான சர்ச்சை ஒரு வழியாக ஓய்ந்துவிட்டதாக பார்க்கப்பட்டது.

இந்நிலையில், திருச்சியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், “வைகோவும், திருமாவளவனும் கூட்டணியில் இருக்கிறார்களா? என்பதை சொல்லும் துணிச்சல் கூட மு.க.ஸ்டாலினுக்கு இல்லை. அவர்கள் இருவரும் திமுகவுடன் தோழமை என்று கூறிக் கொள்கின்றனர். ஆனால் தற்போது வரை அவர்கள் கூட்டணியில் உள்ளனரா என்பதை சொல்லும் துணிச்சல் ஸ்டாலினுக்கு ஏன் வரவில்லை? என கேள்வி எழுப்பியுள்ளார்.