ஸ்டாலினுக்கும் தினகரனுக்கும் இடையே உறவு; முதல்வர் பழனிசாமி

 

ஸ்டாலினுக்கும் தினகரனுக்கும் இடையே உறவு; முதல்வர் பழனிசாமி

இரத்தினசபாபதி, பிரபு, கலைச்செல்வன் ஆகியோர் வெளிப்படையாகவே டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு ஆதரவாக பேசியும், செயல்பட்டும் வருவதாகவும், தினகரன் அணியில் அவர்கள் பொறுப்பில், பதவியில் இருப்பதாகவும் புகார் அளிக்கப்பட்டது

சென்னை: திமுக தலைவர் மு,க.ஸ்டாலினுக்கும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கும் இடையே நெருக்கம் வெளிப்பட்டு விட்டதாக முதல்வர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

அதிமுக-வுக்கு எதிராக கட்சி விரோத செயல்களில் கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு, விருத்தாசலம் எம்எல்ஏ கலைச்செல்வன், அறந்தாங்கி எம்எல்ஏ இரத்தினசபாபதி ஆகியோர் ஈடுபட்டுள்ளார்கள் எனவே 3 பேர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்குமாறு அதிமுக கொறடா ராஜேந்திரன் சபாநாயகர் தனபாலிடம் புகார் அளித்தார்.

dhanapal

இரத்தினசபாபதி, பிரபு, கலைச்செல்வன் ஆகியோர் வெளிப்படையாகவே டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு ஆதரவாக பேசியும், செயல்பட்டும் வருவதாகவும், தினகரன் அணியில் அவர்கள் பொறுப்பில், பதவியில் இருப்பதாகவும் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் அவர்களிடம் 7 நாட்களுக்குள் விளக்கம் கேட்டு சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

முன்னதாக, புகார் அளித்துள்ள தகவல் வெளியான நாளிலேயே, தேர்தல் முடிவுகள் வர உள்ள நிலையில் 3 பேர் மீதும் நடவடிக்கை எடுப்பது கண்டனத்துக்குரியது. ஆட்சி கவிழ்ந்து விடும் என்ற பீதியில் அதிமுக அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது என திமுக தலைவர் ஸ்டாலின் கூறியருந்தார்.

stalin

இதையடுத்து, நோட்டீஸ் அனுப்பிய உடனேயே, திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி திமுக சார்பில், சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசனிடம் சபாநாயகர் தனபால் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர மனு அளித்தார்.

dhinakaran

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் பழனிசாமி, ஆளுங்கட்சியான அதிமுக எம்எல்ஏ-க்கள் மீது தான் கொறடா புகார் அளித்தார். எங்கள் கட்சியை சேர்ந்தவர் கட்சிக்கு விரோதமாக நடந்ததால் நடவடிக்கை எடுக்கிறோம். அவர்கள் எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் அல்ல. இதில் திமுக ஏன் தலையிடுகிறது, இதற்கு ஸ்டாலின் ஏன் கொந்தளிக்கிறார் என தெரியவில்லை. இதன் மூலம் திமுக தலைவர் ஸ்டாலினுக்கும், டிடிவி தினகரனுக்கும் இடையேயான நெருக்கம் வெளிப்பட்டு விட்டது என்றார்.