ஸ்கெட்ச் மோகன் லாலுக்கு இல்ல டாம் வடக்கனுக்கு; காங்கிரஸை பழி தீர்த்த பாஜக

 

ஸ்கெட்ச் மோகன் லாலுக்கு இல்ல டாம் வடக்கனுக்கு; காங்கிரஸை பழி தீர்த்த பாஜக

கேரள காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் டாம் வடக்கன் பாஜவில் இணைந்திருப்பது அக்கட்சியினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் டாம் வடக்கன் பாஜவில் இணைந்திருப்பது அக்கட்சியினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மக்களவை தேர்தல் வருவதையொட்டி அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டணி மற்றும் பிரச்சார பணிகளில் பிஸியாக உள்ளது. இந்நிலையில் கேரள காங்கிரஸின் மிக முக்கியமான தலைவர்களில் ஒருவரான டாம் வடக்கன் பாஜகவில் இணைந்துள்ளார்.

மிஸ்ஸான பாஜக டார்கெட்

mohan

கேரளாவில் நடிகர் மோகன் லால் மூலம் பாஜக வாக்கு சேகரிக்கும் திட்டத்தில் உள்ளதென கூறப்பட்டது. இதன் காரணமாகவே மோகன் லாலும் மோடியும் அவ்வப்போது சந்தித்து வருகிறார்கள் என பொது வெளியில் பேசப்பட்டது. ஆனால் மோகன் லால் நான் மோடியுடன் அரசியல் பற்றி எதுவும் பேசவில்லை என்று கூறிவிட்டார். தற்போது காங்கிரஸின் முக்கிய தலைவரான டாம் வடக்கனை தங்கள் பக்கம் இழுத்துக்கொண்டது பாஜக. மோகன் லால் போனால் மம்மூட்டி என்று நினைக்காமல், காங்கிரஸ் கையாலேயே அதன் கண்களை குத்த திட்டமிட்டிருக்கிறது பாஜக.

ஒரே நாளில் மனம் மாறிய டாம் வடக்கன்

வடக்கன்

மார்ச் 12 -அன்று கூட பிரியங்கா காந்தியின் ட்வீட்களை ரீட்வீட் செய்து வந்த டாம் வடக்கன் எப்படி பாஜகவில் சேர்ந்தார் என பலருக்கும் ஆச்சர்யம். கேரள காங்கிரஸில் செய்தி தொடர்பாளராக இருந்த டாம் வடக்கன், சோனிய காந்திக்கு நெருக்கமானவர். கேரள காங்கிரஸில் மிக முக்கியமான நபர், என்ன செய்வது பாஜக கொடுத்த பெட்டி வெயிட்டாக இருந்திருக்கும் என அவரை நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

டாம் வடக்கன் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் சார்பாக போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் அவர் காங்கிரஸ் நம்பிக்கையை சிதைக்கு விதமாக நடந்துகொண்டிருக்கிறார். பாஜகவில் இணைந்த அவர், புல்வாமா தாக்குதல் பற்றியும் இந்திய ராணுவப்படை பற்றியும் காங்கிரஸ் தரப்பு பேசியது எனக்கு  வருத்தத்தை அளித்தது. இந்திய ராணுவத்தை காங்கிரஸ் அவமதித்துவிட்டது, தற்போது அது குடும்ப கட்சியாக மாறி வருகிறது என குற்றம்சாட்டியுள்ளார். பாஜகவை தீவிரமாக விமர்சித்த டாம் வடக்கன், ஒரே நைட்டில் இப்படி மாறியது காங்கிரஸ்க்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.