ஷங்கர்-வடிவேலு சமரசம்?: கலகலக்க வருகிறது ‘இம்சை அரசன் 24ம் புலிகேசி’..!

 

ஷங்கர்-வடிவேலு சமரசம்?: கலகலக்க வருகிறது ‘இம்சை அரசன் 24ம் புலிகேசி’..!

‘இம்சை அரசன் 24ம் புலிகேசி’ திரைப்பட விவகாரத்தில் இயக்குநர் ஷங்கர்-வடிவேலு இடையே சமரசம் ஏற்பட்டதையடுத்து, விரைவில் ஷூட்டிங் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை: ‘இம்சை அரசன் 24ம் புலிகேசி’ திரைப்பட விவகாரத்தில் இயக்குநர் ஷங்கர்-வடிவேலு இடையே சமரசம் ஏற்பட்டதையடுத்து, விரைவில் ஷூட்டிங் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் ஷங்கரின் ‘எஸ் பிக்சர்ஸ்’ தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கத்தில் வெளியான ‘இம்சை அரசன் 23ம் புலிகேசி’ திரைப்படத்தின் அல்டிமேட் காமெடி அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது. இதன் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாம் பாகமான ‘இம்சை அரசன் 24ம் புலிகேசி’ படத்திற்கு கடந்த 2016ம் ஆண்டு பூஜை போடப்பட்டது.

இந்நிலையில், இப்படத்திற்கு மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு ஷூட்டிங் நடைபெற்று வந்தது. இதனிடையே, வடிவேலுவுக்கும் படக்குழுவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதையடுத்து வடிவேலு படத்தில் தொடர்ந்து நடிக்க மறுத்துவிட்டார்.

imsaiarasan

வடிவேலுவின் இத்தகைய செயலால் தயாரிப்பாளர் தரப்பில் பல கோடி நஷ்டம் ஏற்பட்டதால், ஷங்கர் தரப்பில் வடிவேலு மீது தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக தயாரிப்பாளர் சங்கம் வடிவேலுவிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது.

இந்த விவகாரத்தில் நடிகர் வடிவேலு இம்சை அரசன் 24ம் புலிகேசி படத்தில் நடிக்க வேண்டும் அல்லது படத்துக்காக செலவழித்த தொகையை திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்தது. இதனை ஏற்க மறுத்த வடிவேலு, தற்போது சம்மதம் தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது.

imsaiarasan

மேலும், இம்சை அரசன் 24ம் புலிகேசி’ படப்பிரச்னையை தீர்க்கும் வரை வடிவேலுவை வைத்து எந்த தயாரிப்பாளரும் படம் எடுக்க வேண்டாம் என்று தயாரிப்பாளர் சங்கம் அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.