ஷகிலா மாதிரி நடிக்கிறேனா? கடுப்பான நடிகை சோனா

 

ஷகிலா மாதிரி நடிக்கிறேனா? கடுப்பான நடிகை சோனா

இதில் சோனா மீண்டும் கவர்ச்சியாக உடை அணிந்து நடித்துள்ளதாகச் செய்திகள் வெளியாகியது. 

நடிகை சோனா  பூவெல்லாம் உன் வாசம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார், இதன்பிறகு ஷாஜகான், சிவப்பதிகாரம், குரு என் ஆளு, குசேலன், ரௌத்ரம், கோ  ஆகிய படங்களில் நடித்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் பணியாற்றிவந்த சோனாவுக்கு  சமீபகாலமாகப் படவாய்ப்புகள் கிடைக்கவில்லை. தற்போது திரிஷா நடித்துள்ள பரமபத விளையாட்டு,  வரலட்சுமியின்  சேசிங் படத்திலும் நடித்துள்ளார்.

 

 மலையாளத்திலும்   குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வரும் சோனா நீண்ட இடைவெளிக்குப் பிறகு பச்ச மாங்கா படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.  இப்படத்தில் அவரோடு நடிகர் பிரதாப் போத்தனும் நடித்துள்ளார். ஜெஷீதா ஷாஜி மற்றும் பால் பொன்மணி  தயாரித்துள்ள இப்படத்தை ஜெய்ஸ் இயக்கியுள்ளார். இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இதில் சோனா மீண்டும் கவர்ச்சியாக உடை அணிந்து நடித்துள்ளதாகச் செய்திகள் வெளியாகியது. 

ttn

இந்நிலையில் சமீபத்தில் இதுகுறித்து பேட்டியளித்துள்ள அவர்,  ‘ஷகிலா வழியில் சோனா கவர்ச்சியாக நடிக்கிறார்” என்பது போன்ற செய்திகள்  வெளியிட்டுள்ளனர். பச்சமாங்கா படம் ஒரு கனமான கதையை அடிப்படையாகக் கொண்ட படம். நம் பாலு மகேந்திரா சார் படம் போல பக்கா க்ளாஸியான படம் அது. அப்படத்தின் ட்ரைலரில் என் உடை மற்றும் சிறிது நேர நடிப்பைப் பார்த்து பலர் நான் அதி கவர்ச்சியான நடிகை என்பது போன்ற பிம்பத்தை ஏற்படுத்தி வருகிறார்கள். அது உண்மை அல்ல. கேரளாவில்   பெண்கள்   எப்படி உடை அணிவார்களோ அதை அப்படியே பிரதிபலிக்க வேண்டும் என்பதால்  தான் படத்தில் அப்படியான உடையை அணிந்திருந்தேன். இந்தப்படத்தை என் உடை மூலமாக கவர்ச்சி படம் என்றோ, என்னை கவர்ச்சி நடிகை என்றோ சித்தரிக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன். இது மிக சிறப்பான படம். என் கதாபாத்திரமும் அப்படியே. படம் வந்தபின் இந்த வார்த்தையை அனைவரும் சொல்வார்கள்’ என்று கூறியுள்ளார்.