வைட்டமின் மற்றும் இரும்புச் சத்து நிறைந்தது – சுவையான பசலைக்கீரை மக்ரோனி செய்வது எப்படி?

 

வைட்டமின் மற்றும் இரும்புச் சத்து நிறைந்தது – சுவையான பசலைக்கீரை மக்ரோனி செய்வது எப்படி?

வைட்டமின் சத்து மற்றும் இரும்புச் சத்து நிறைந்த சுவையான பசலைக்கீரை மக்ரோனி செய்வது எவ்வாறு என்பதை இந்த பதிவில் காணலாம்.

நாம் பகலில் உண்ணும் உணவைக் காட்டிலும் இரவு உணவு என்பது லைட்டாக இருப்பது நல்லது. ஆனால் ஊட்டச்சத்து நிறைந்ததாகவும் இரவு உணவு அமைய வேண்டியது அவசியமாகும். அந்த வகையில் வைட்டமின் சத்து மற்றும் இரும்புச் சத்து நிறைந்த சுவையான பசலைக்கீரை மக்ரோனி செய்வது எவ்வாறு என்பதை இந்த பதிவில் காணலாம்.

தேவையான பொருட்கள்:

மக்ரோனி 2 கப், ஆலிவ் எண்ணெய் 2 ஸ்பூன், பொடியாக நறுக்கிய பூண்டு பற்கள், பொடியாக நறுக்கிய 4 சின்ன வெங்காயம், பொடியாக நறுக்கிய ஒரு தக்காளி, நறுக்கிய காளான், ஒரு கட்டு பசலைக் கீரை, டையட் மயோனிஸ் 5 ஸ்பூன், மிளகுத் தூள் 1 ஸ்பூன் மற்றும் தேவைக்கேற்ப சிறிதளவு உப்பு

செய்யும் முறை:

1)அடி கனமாக கொண்ட ஒரு பாத்திரத்தில் 1 லிட்டர் தண்ணீரை கொதிக்க விடவும்.

2)அந்த நீரில் சிறிதளவு உப்பு சேர்த்து, மக்ரோனியை போட்டு 5 நிமிடங்கள் வேக வைக்கவும்.

3)அடியில் மக்ரோனி தங்கி விடாமல் இருக்க அவ்வப்போது கிளறி விட வேண்டும். 5 நிமிடத்திற்கு பிறகு மக்ரோனியை வடிகட்டி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

4)வடிகட்டி எடுத்து வாய்த்த நீரில் 120மிலி தண்ணீரை தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும். இதை பிறகு பயன்படுத்த வேண்டும்.

macroni

5)நான்ஸ்டிக் கடாய் ஒன்றை எடுத்து அதில் சிறிதளவு ஆலிவ் எண்ணெய் ஊற்றவும்.

6)எண்ணெய் காய்ந்த பின்பு அதில் பூண்டு மற்றும் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். நன்கு வதங்கிய பிறகு தக்காளி சேர்க்க வேண்டும்.  தக்காளி வெந்த பிறகு காளான் மற்றும் கீரையை சேர்க்கவும்.

7)மூன்று நிமிடங்கள் நன்றாக வதக்க வேண்டும். கீரையில் இருக்கும் நீர் வெளியேறும். இதையடுத்து சிறிதளவு மிளகுத் தூள் மற்றும் உப்பு சேர்க்கவும்.

8)மக்ரோனியை வடிகட்டி எடுத்து வைத்த நீரை இப்போது இந்தக் கலவையில் சேர்க்கவும்.

9)நன்றாக கிளறிய பின்பு தற்போது அடுப்பில் இருந்து கடாயை இறக்கி மயோனிஸ் சேர்த்து நன்றாக கிளற வேண்டும்.

10)இதைத் தொடர்ந்து, இப்போது மீண்டும் அடுப்பில் வைத்து கிளற வேண்டும். ஒரு நிமிடத்தில் சாஸ் கொஞ்சம் கெட்டியாக மாறும். இந்த நேரத்தில் மக்ரோனியை கலந்து நன்றாக கிளறி விடவும்.

இதோ…க்ரீம் நிறைந்த பசலைக்கீரை மக்ரோனி தயார் ஆகி விட்டது. இதன் மேல் கொத்துமல்லி, கேரட் துருவல் போன்றவற்றை தூவி அலங்கரித்த பின் பரிமாறலாம்.