வைகோவின் சவாலை ஏற்க தயார்: பொன்.ராதாகிருஷ்ணன் அதிரடி

 

வைகோவின் சவாலை ஏற்க தயார்: பொன்.ராதாகிருஷ்ணன் அதிரடி

தமிழகம் வந்தால் பிரதமருக்கு கறுப்பு கொடி காட்டுவோம் என்ற வைகோவின் சவாலை ஏற்க தயார் என மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

கோவை: தமிழகம் வந்தால் பிரதமருக்கு கறுப்பு கொடி காட்டுவோம் என்ற வைகோவின் சவாலை ஏற்க தயார் என மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மிகப்பெரிய சதிச் செயல் தனக்கு எதிராக நடத்தப்பட்டதை கண்டித்து திமுக-வில் இருந்து வெளியேறினார். அந்த சதிச்செயல் செய்தவர்களை அரசியலில் இருந்து ஓய்வுபெற வைக்க சபதம் புரிந்து, தமிழகத்தை காப்பாற்ற போகிறேன் என மதிமுக-வை உருவாக்கினார். இன்று என்ன நிலை உருவாகி உள்ளது என அவருக்குதான் தெரியும்.

வைகோ தனது நிலைப்பாட்டில் இருந்து மாறி எந்த தீய சக்திக்கு எதிராக போராடுவேன் என வெளியே வந்தாரோ, அந்த தீய சக்திக்கு ஊக்கமும், உற்சாகமும் அளிக்கும் களத்தில் இறங்கி உள்ளார். வைகோ மீதான நம்பகத்தன்மையை இது கேலிக்குறியதாக மாற்றி உள்ளது.

பிரதமர் வந்தால் கறுப்புக் கொடி காட்டுவோம் என்ற வார்த்தைகள் யாரையோ திருப்தி செய்யவும், அரசியல் ரீதியான ஆதாயம் தேடுவதற்காகவும் சொல்லி உள்ளார். எதுவாக இருந்தாலும் இந்த சவாலை நான் ஏற்றுக்கொள்கிறேன் என்றார்.