வைகோவின் ஆட்கொணர்வு மனுவிற்கு மறுப்பு தெரிவித்தது உச்சநீதி மன்றம் !

 

வைகோவின் ஆட்கொணர்வு மனுவிற்கு மறுப்பு தெரிவித்தது உச்சநீதி மன்றம் !

வை.கோ. அவர்கள் நேற்று காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லாவை கண்டுபிடித்து தரக்கோரி அளித்த மனுவிற்கு உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. 

 செப்டம்பர் 15 ஆம் தேதி நடக்கவிருக்கும் அண்ணா மாநாட்டில் கலந்து கொள்ள ஃபரூக் அப்துல்லாவை தொடர்ப்பு கொள்ள முடியாத நிலையில் அவரை காணவில்லை என தெரிய வந்தது. காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு நிராகரித்த போதிலிருந்து ஃபரூக் அப்துல்லா பல அரசியல் தலைவர்களின் காவலில் வைக்கப் பட்டுள்ளார் என தகவல்கள் வெளியாயின. ஆனால் ஃபரூக் அப்துல்லாவை யாரும்  சிறைப் பிடிக்கவில்லை என உள்துறை தெரிவித்தது. 

இந்நிலையில் ஃபரூக் அப்துல்லாவை கண்டுபிடித்து தரக்கோரி ம.தி.மு.க கட்சியின் தலைவர் வை.கோ உச்சநீதி மன்றத்தில் நேற்று ஆட்கொணர்வு மனு அளித்திருந்தார். இன்று நீதிபதி ரமணா தலைமையிலான அமர்வு மனுவை உடனடியாக விசாரிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும், மனுவை எப்போது விசாரிக்க வேண்டும் என்பதை நீதிபதி முடிவு செய்வார் என நீதிபதி தலைமையிலான அமர்வு தெரிவித்ததாக தகவல்கள் கூறுகின்றன.