வைகை அணையில் தற்போதைய‌ நீர் இருப்பு 28 அடி, எப்போதும் சேறு இருப்பு 20 அடி!

 

வைகை அணையில் தற்போதைய‌ நீர் இருப்பு 28 அடி, எப்போதும் சேறு இருப்பு 20 அடி!

சட்டமன்ற கூட்டத்தொடர் நடந்துகொண்டிருக்கும்போதே இதற்கான உத்தரவில் துணை முதலமைச்சர் கை வைத்து வைகையை காப்பாரா அல்லது இதற்கும் அமித் ஷாவிடம் பர்மிஷன் வாங்க டெல்லி செல்வாரா என்பதை இன்னும் ஓரிரு நாட்களில் தெரிந்துகொள்வோம்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவரில் ஒருவர் துணை முதலமைச்சராகவும், மற்றொருவர் மக்களவை உறுப்பினராகவும் கொண்டு மத்தியிலும் மாநிலத்திலும் தற்காலிகமாக‌ கோலோச்சும் பெருமைகொண்ட தேனி மாவட்டத்தின் மற்றொரு நிரந்தர‌ பெருமை வைகை அணை. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் என ஐந்து மாவட்டங்களின் குடிநீர் தேவையை பெருமளவில் பூர்த்தி செய்வதும் வைகைதான். கேரளாவில் வெளுத்துவாங்கவேண்டிய தென்மேற்கு பருவமழை சீசனாக இப்போது இருந்தாலும், அணையில் தற்போதைய நீர்மட்டம் 27.99 அடிகள். ஆனால், சேறு சகதியைக் கணக்கில் கொண்டால், அவை மட்டுமே அணையின் உயரத்தில் 20 அடிகளுக்கு குறையாமல் இருக்கும்.

Vaigai

தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த வேகத்தை காட்டாததால், வைகை அணையில் தற்போது 28 அடி மட்டுமே நீர் உள்ளது. இதில், 20 அடிக்கு சேறும் சகதியுமாக இருப்பதால், போதுமான இடம் இல்லாததால் செத்து கரை ஒதுங்க ஆரம்பித்துள்ளன. கெட்டதிலும் நல்லதைப் பார்க்கவேண்டும் என்பதால், அணையில் தண்ணீர் இல்லாதபோதே அணையை தூர்வார வேண்டும். சட்டமன்ற கூட்டத்தொடர் நடந்துகொண்டிருக்கும்போதே இதற்கான உத்தரவில் துணை முதலமைச்சர் கை வைத்து வைகையை காப்பாரா அல்லது இதற்கும் அமித் ஷாவிடம் பர்மிஷன் வாங்க டெல்லி செல்வாரா என்பதை இன்னும் ஓரிரு நாட்களில் தெரிந்துகொள்வோம்.