வைகுண்டராஜனிடம் இருந்து பணம் வாங்கவில்லை: டிடிவி தினகரன் திட்டவட்டம்!

 

வைகுண்டராஜனிடம் இருந்து பணம் வாங்கவில்லை: டிடிவி தினகரன் திட்டவட்டம்!

வைகுண்டராஜனிடம் இருந்து நான் இரண்டரை கோடி ரூபாய் பணம் பெற்றதாக வெளியான தகவலில் உண்மை இல்லை என டிடிவி தினகரன் மறுப்பு தெரிவித்துள்ளார்.

சென்னை: வைகுண்டராஜனிடம் இருந்து நான் இரண்டரை கோடி ரூபாய் பணம் பெற்றதாக வெளியான தகவலில் உண்மை இல்லை என டிடிவி தினகரன் மறுப்பு தெரிவித்துள்ளார்.

விவி மினரல்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான அலுவலகங்கள், வீடுகள் என 100-க்கும் மேற்பட்ட இடங்களில் கடந்த 6 நாட்களாக வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அந்த சோதனை இன்று முடிவடைந்ததாகவும், அதில் விவி மின்ரல்ஸ் வைகுண்டராஜன் குறித்த பல்வேறு ரகசியங்கள் வருமான வரித்துறையிடம் சிக்கியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

குறிப்பாக, ரத்து செய்யபட்ட ஆர்.கே நகர் இடைத்தேர்தலின் போது டிடிவி தினகரனுக்கு வைகுண்டராஜன் ரூ. 2.5 கோடி பணம் கொடுத்தது தொடர்பான ஆவணங்கள் வருமான வரித்துறையிடம் சிக்கியிருப்பதாக தகவல் வெளியாகியது.

இந்நிலையில், ரத்து செய்யப்பட்ட ஆர்கே நகர் இடைத்தேர்தலின் போது, விவி மினரல்ஸ் நிறுவனம் எனக்கு இரண்டரை கோடி ரூபாய் கொடுத்ததாக ஒரு தவறான தகவலை சிலர் பரப்புவதாகவும் அது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என்றும் டிடிவி தினகரன் மறுப்பு தெரிவித்துள்ளார்.

மேலும், இதுபோன்ற பொய்யான தகவலை பரப்புபவர்கள் நிறுத்திக் கொள்ளாவிட்டால்,  சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தினகரன் எச்சரித்துள்ளார்.