வேளாண் மண்டலம் குறித்து முதல்வர் தலைமையில் நாளை அமைச்சரவைக் கூட்டம்!

 

வேளாண் மண்டலம் குறித்து முதல்வர் தலைமையில் நாளை அமைச்சரவைக் கூட்டம்!

டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும் என்றும் வேளாண் மண்டலங்களைப் பாதுகாக்கத் தனிச் சட்டம் கொண்டு வரப்படும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும் என்றும் வேளாண் மண்டலங்களைப் பாதுகாக்கத் தனிச் சட்டம் கொண்டு வரப்படும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் தெரிவித்திருந்தார். ஆனால் கடந்த 14 ஆம் தேதி பட்ஜெட் தாக்கலின் போது வேளான் மண்டலமாக அறிவிக்க முயற்சி மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார். நேற்று நடைபெற்ற கூட்டத்தொடரின் போதும் இது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. 

ttn

இந்நிலையில் டெல்டா மாவட்டங்களை வேளாண் மண்டலமாக அறிவிப்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை மாலை அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பி.எஸ் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்க  உள்ளனர். இதில் சிறப்பு வேளாண் மண்டலமாக டெல்டா மாவட்டங்களை அறிவிக்கலாம் என்ற முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.