வேளாண் மண்டலம்: கடிதத்தை வெளியிடுவோம் என்று மிரட்டிய ஸ்டாலின்… தானாக வெளியிட்ட ஜெயக்குமார்!

வேளாண் மண்டலம்: கடிதத்தை வெளியிடுவோம் என்று மிரட்டிய ஸ்டாலின்… தானாக வெளியிட்ட ஜெயக்குமார்!

சேலத்தில் கிரிக்கெட் மைதானம் திறப்பு விழாவில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி காவிரி டெல்டா மாவட்டங்கள் வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும் என்றார். இது தொடர்பான தமிழக அரசின் கடிதத்தை மத்திய அரசுக்கு அமைச்சர் ஜெயக்குமார் கொண்டுபோய் கொடுத்தார் என்று கூறப்பட்டது.

டெல்டா மாவட்டத்தை வேளாண் மண்டலமாக அறிவிப்பது தொடர்பாக மத்திய அரசுக்கு எழுதிய கடிதத்தை அரசு வெளியிடாவிட்டால் அதை தாம் வெளியிடுவேன் என்று மு.க.ஸ்டாலின் கூறியிருந்த நிலையில் கடிதம் ஒன்றை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
சேலத்தில் கிரிக்கெட் மைதானம் திறப்பு விழாவில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி காவிரி டெல்டா மாவட்டங்கள் வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும் என்றார். இது தொடர்பான தமிழக அரசின் கடிதத்தை மத்திய அரசுக்கு அமைச்சர் ஜெயக்குமார் கொண்டுபோய் கொடுத்தார் என்று கூறப்பட்டது.

eps-with-rahul-dravid

வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்றால் அது மத்திய அரசால் மட்டுமே முடியும். சில மாதங்களுக்கு முன்பு காவிரி படுகை மாவட்டங்களை பெட்ரோலிய மண்டலமாக மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்த நிலையில் அதை வேளாண் மண்டலமாக அறிவிக்கப்போவதாக முதல்வர் கூறியிருந்தது சந்தேகத்தை ஏற்படுத்தியதாக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியிருந்தார். அந்த கடிதத்தில் என்ன கூறப்பட்டுள்ளது என்று தமிழக அரசு ரகசியம் காக்க வேண்டிய அவசியம் என்ன என்றும் கேள்வி எழுப்பியிருந்தார். மேலும், தமிழக அரசு அந்த கடிதத்தை வெளியிடாவிட்டால், நானே அதைப் பெற்று வெளியிடுவேன் என்றும் கூறியிருந்தார்.
இந்த நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒப்புதலோடு தன்னுடைய குழு தயாரித்து, மத்திய அரசுக்கு அனுப்பிய கடிதம் என்று ஒரு அறிவிப்பை அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ளார். இதனால் மு.க.ஸ்டாலின் வாயை அமைச்சர் ஜெயக்குமார் அடைத்துவிட்டதாக அ.தி.முக-வினர் மகிழ்ச்சியுடன் கூறி வருகின்றனர்.