வேளாண் தொழிலை மீட்டெடுப்போம்.. வயல்வெளியில் நாற்று நட்ட பள்ளி மாணவர்கள்…!

 

வேளாண் தொழிலை மீட்டெடுப்போம்.. வயல்வெளியில் நாற்று நட்ட பள்ளி மாணவர்கள்…!

சிவகங்கை, மௌண்ட் லிட்ரா ஜீ என்ற தனியார்ப் பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கு வேளாண் தொழிலின் முக்கியத் துவத்தை மாணவர்களுக்குப் பாடமாகக் கற்பிக்கின்றனர்.

 வேளாண் தொழில் அழிந்து விடுமோ என்ற அச்சத்தில் பல விவசாயிகள் உள்ளனர். வருவாய் குறைவு மற்றும் மழையின்மை காரணமாக விளைச்சல் பாதிப்பதால் விவசாயிகளே தன் பிள்ளைகளை விவசாயம் செய்ய அனுமதிக்க யோசிக்கின்றனர். அதனால், வேளாண் தொழிலின் முக்கியத்துவத்தை சில தனியார்ப் பள்ளிகள் பயிலும் மாணவர்களுக்கு கற்றுக் கொடுத்து வருகின்றனர். 

Agriculture

சிவகங்கை, மௌண்ட் லிட்ரா ஜீ என்ற தனியார்ப் பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கு வேளாண் தொழிலின் முக்கியத் துவத்தை மாணவர்களுக்குப் பாடமாகக் கற்பிக்கின்றனர். அதன் ஒரு பகுதியாக, மாணவர்களை கண்டுப்பட்டி கிராமத்தில் உள்ள வயல்வெளிக்கு அழைத்துச் சென்று நேரடியாக விவசாயம் எவ்வாறு செய்யப்படுகிறது எனச் சொல்லிக் கொடுத்தனர். 

Agriculture

அதனைத் தொடர்ந்து மாணவர்கள், வயலில் நாற்று நடும் பெண்களுடன் சேர்ந்து இறங்கி நாற்று நட கற்றுக் கொண்டனர். சம்பா, வாழை, கொய்யா ஆகியவற்றின் விளைச்சலைப் பற்றி மாணவர்களுக்கு கற்றுத் தரப்பட்டது. இது குறித்துப் பேசிய மாணவர்கள், நாற்று நடுவது ஒரு புதிய அனுபவமாக உள்ளது எனவும், துவண்டு கிடக்கும் நம் நாட்டின் வேளாண் தொழிலை மீது எடுப்போம் என்று தெரிவித்துள்ளனர். 

Agriculture

இத்தகைய பாடங்கள் மாணவர்களுக்கு வேளாண் தொழிலைப் பற்றிய புரிதலைத் தருவதோடு, உணவு அளிக்கும் விவசாயத்தின் முக்கியத் துவத்தைப் பற்றி அறியும் வாய்ப்பாகவும் அமையும். நம் நாட்டின் அடுத்த சந்ததியினரிடம் விவசாயம் பற்றி எடுத்துரைத்தால் மட்டுமே பிற்காலத்தில் அவர்கள் உணவுக்காக மற்ற நாட்டிடம் கையேந்தும் சூழல் ஏற்படாது.