வேல்முருகன் கட்சியில் இணைந்த வீரப்பன் மனைவி மற்றும் குருவின் சகோதரி; ஆட்டம் காணும் பா.ம.க!?

 

வேல்முருகன் கட்சியில் இணைந்த வீரப்பன் மனைவி மற்றும் குருவின் சகோதரி; ஆட்டம் காணும் பா.ம.க!?

காடுவெட்டி குருவின் சகோதரி மற்றும் வீரப்பன் மனைவி முத்துலட்சுமி ஆகியோர், தமிழக வாழ்வுரிமை கட்சியில் இணைந்துள்ளனர்.

சென்னை: காடுவெட்டி குருவின் சகோதரி மற்றும் வீரப்பன் மனைவி முத்துலட்சுமி ஆகியோர், தமிழக வாழ்வுரிமை கட்சியில் இணைந்துள்ளனர்.

பாமகவிலிருந்து பிரிந்து வந்த வேல்முருகன் 

velmurugan

பாமகவிலிருந்து பிரிந்து வந்து தமிழக வாழ்வுரிமை கட்சி என்ற புதிய கட்சியை ஆரம்பித்து சமூகத்தில் நடக்கும் பல்வேறு பிரச்சனைகளுக்கு எதிராகக் குரல் வருகிறார் வேல்முருகன். தொடர்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வரும் வேல்முருகன், நடக்கவிருக்கும் மக்களவை தேர்தலில், திமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

வேல்முருகன் கட்சியில்  காடுவெட்டி குருவின் சகோதரி

velmurugan

இந்நிலையில்,  தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாநில செயற்குழுக் கூட்டம் சென்னை வடபழனியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட காடுவெட்டி குருவின் சகோதரி செந்தாமரை மற்றும் வீரப்பன் மனைவி முத்துலட்சுமி ஆகியோர், வேல்முருகன் முன்னிலையில், தமிழக வாழ்வுரிமை கட்சியில் இணைந்தனர். 

குருவின் மொத்த கடனும் அடைக்கப்படும்

kaduvetti

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வேல்முருகன், அரசியல், செல்வாக்கு என ராமதாஸை வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி, அப்பகுதியில் வளர்ந்து வருவதால், அவர் மீது தொடர்ந்து வழக்குகள் போடப்பட்டு வருகின்றனர்’ என்றார். 

தொடர்ந்து பேசிய அவர்,  தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பாக, காடுவெட்டி குருவின் ஒட்டுமொத்த கடனையும் நாங்களே அடைப்போம். அதே போல் வீரப்பனுக்கு அரசு சார்பில் மணிமண்டபம் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று உறுதியளித்தார். 

ராமதாஸ் மீது அடுக்கடுக்கான  குற்றச்சாட்டு

kaduvetti

முன்னதாக வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குருவின் மரணம் இயற்கையானதல்ல அவருக்கு ஸ்லோபாய்சன் கொடுக்கப்பட்டது. கட்சிக்காக என் தந்தையைப் பயன்படுத்திக் கொண்டனர். கட்சிக்காக அப்பா கடுமையாக உழைத்தார். ஆனால், அவர்  மருத்துவமனையிலிருந்தபோது, யாரும் உதவி செய்ய வரவில்லை. என் தந்தையை அழிக்க வேண்டும் என்று 30 வருடமாகச் சதி செய்திருக்கிறார்கள்’ என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டை என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்திருந்தனர். தற்போது அவர்கள் பாமகவிலிருந்து பிரிந்து வந்து வேல்முருகன் கட்சியில் சேர்ந்திருப்பது, பாமகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இதையும் வாசிக்க: திமுகவில் இணைந்த அதிமுக ஸ்லீப்பர் செல்கள்; வருமான வரித்துறை சோதனையின் பின்னணி?!