வேலை நேரத்தில் மருத்துவமனையில் இல்லாத 7 டாக்டர்கள் மற்றும் 3 செவிலியர்கள் மீது வழக்கு…..

 

வேலை நேரத்தில் மருத்துவமனையில் இல்லாத 7 டாக்டர்கள் மற்றும் 3 செவிலியர்கள் மீது வழக்கு…..

மத்திய பிரதேசத்தில் பணி நேரத்தில் மருத்துவமனையில் இல்லாத மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸ் எதிர்ப்பு நடவடிக்கையில் தங்களது உயிரை பணயம் வைத்து மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். மருத்துவ துறை பணியாளர்களின் தன்னலமற்ற சேவையை மக்கள் அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

டாக்டர்

இந்த சூழ்நிலையில் மத்திய பிரதேச மருத்துவமனை ஒன்றில் பணி நேரத்தில் சில மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அங்கு இல்லாதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசம் நர்சிங்புரில் உள்ள மருத்துவமனையில் பணி நேரத்தில் அங்கு இல்லாத 7 மருத்துவர்கள் மற்றும் 3 செவிலியர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

செவிலியர்கள்

இது குறித்து நரசிங்புர் எஸ்.பி. குர்கரன் சிங் கூறுகையில், நரசிங்புர் மருத்துவமனையில் பணி நேரத்தில் அங்கு இல்லாத 7 மருத்துவர்கள் மற்றும் 3 செவிலியர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் அனுமதியோ அல்லது விடுமுறை பெறாமல் பணி நேரத்தில் மருத்துவமனையில் இல்லாமல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது என தெரிவித்தார்.