வேலை நாட்களில் நீதிபதிகளுக்கு விடுமுறை கிடையாது: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்

 

வேலை நாட்களில் நீதிபதிகளுக்கு விடுமுறை கிடையாது: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்

வேலை நாட்களில் விடுமுறை எடுக்கக் கூடாது என உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் உத்தரவு பிறப்பித்துள்ளார்

டெல்லி: வேலை நாட்களில் விடுமுறை எடுக்கக் கூடாது என உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த தீபக் மிஸ்ராவின் பதவிக்காலம் முடிவடைந்ததையடுத்து, 46-வது தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய் இம்மாத தொடக்கத்தில் பதவியேற்றுள்ளார்.

இந்நிலையில், வேலை நாட்களில் விடுமுறை எடுக்கக் கூடாது என உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் உத்தரவு பிறப்பித்துள்ளார். நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் பல்வேறு வழக்குகள் தீர்வு காணப்படாமல் பல ஆண்டுகளாக தேங்கிக் கிடக்கின்றன.

உச்ச நீதிமன்றத்தில் சுமார் 55,000 வழக்குகளும், நாடு முழுவதும் உள்ள உயர் நீதிமன்றங்களில் சுமார் 32 லட்சம் வழக்குகளும் தேங்கியுள்ளன. அதேபோல், மாவட்ட நீதிமன்றங்களில் இரண்டு கோடிக்கும் மேற்பட்ட வழக்குகள் தேங்கியுள்ளன.

இதனால் நிலுவையில் உள்ள வழக்கை விரைந்து முடிக்க வேண்டி, வேலை நாட்களில் விடுமுறை எடுக்கக் கூடாது என உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதன்படி அவசர காலங்களை தவிர நீதிமன்ற வேலை நாட்களில் நீதிபதிகள் விடுமுறை எடுப்பதை தவிர்க்க வேண்டும் எனவும், விடுப்பு எடுக்கும் நீதிபதிகளிடமிருந்து வழக்குகள் தொடர்பான கோப்புகளை எடுத்துவிடுமாறும் தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.