வேலை இழப்பு, வங்கிக்கடன் ரத்து, ஏற்றுமதி, இறக்குமதி சரிவு! புள்ளிவிவரத்துடன் முன் வைக்கும் ப. சிதம்பரம்

வேலை இழப்பு, வங்கிக்கடன் ரத்து, ஏற்றுமதி, இறக்குமதி சரிவு! புள்ளிவிவரத்துடன் முன் வைக்கும் ப. சிதம்பரம்

நாட்டின் இறக்குமதி 13.9 சதவீதம் ஏற்றுமதி 6.6 சதவீதம் குறைந்துள்ளதாக முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். 

நாட்டின் இறக்குமதி 13.9 சதவீதம் ஏற்றுமதி 6.6 சதவீதம் குறைந்துள்ளதாக முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். 

chidambaram

ஐ.என்.எஸ்., மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள, முன்னாள் நிதி அமைச்சர் சிதம்பரத்தின் ட்விட்டர் பக்கங்களை அவரது குடும்ப உறுப்பினர்கள் இயக்கிவருகின்றனர். இந்நிலையில் ப. சிதம்பரத்தின் கருத்துக்களை கேட்டு ட்விட்டரில் பதிவிட்டுவருவதாக கூறப்படுகிறது. அவ்வப்போது நாட்டு பிரச்னைகளுக்கு சிறையிலிருந்தே கருத்து சொல்லும் ப.சிதம்பரம் இந்த முறை பொருளாதார மந்த நிலையை பற்றி பேசியுள்ளார். 

 ப.சிதம்பரம்

இதுகுறித்து ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ள அவர், “நாட்டின் இறக்குமதி 13.9 சதவீதம் ஏற்றுமதி 6.6 சதவீதம் குறைந்துள்ளது. அதாவது ஒவ்வொரு மாதமும் நாட்டில் ஆயிரக்கணக்கான வேலைகள் இழக்கப்படுகின்றன. வங்கிக்கடன் மார்ச் முதல் ஆகஸ்ட் மாதங்களுக்கிடையில் ரூ. 80 ஆயிரம் கோடி ரத்து செய்யப்பட்டுள்ளது. அதாவது நடைமுறையில் புதிய முதலீடு எதுவுமே இல்லை” என்றும் குறிப்பிட்டுள்ளார்.