வேலையைவிட்டு போய்டுங்க… தொழில் பன்றத்துக்கு நாங்க முதலீடு பன்றோம்: ஊழியர்களின் காலை பிடிக்கும் அமேசான்!

 

வேலையைவிட்டு போய்டுங்க… தொழில் பன்றத்துக்கு நாங்க முதலீடு பன்றோம்: ஊழியர்களின் காலை பிடிக்கும் அமேசான்!

இந்தியா மட்டுமின்றி பல்வேறு நாடுகளில் ஆன்லைன் வர்த்தகத்தில் கொடிக்கட்டி பறக்கும் அமேசான் நிறுவனம் பொருட்களை வாடிக்கையாளர்களிடம் துரிதமாக கொண்டு சேர்ப்பதற்காக புதிய திட்டங்ககளை கையிலெடுத்துள்ளது.

அமேசான் நிறுவனத்தில் பொருட்களை பேக்கிங் செய்யும் ஊழியர்கள் வேலையைவிட்டு செல்லுமாறும், அவர்கள் சுயத்தொழில் செய்ய விரும்பினால் தாங்களே நிதியுதவி வழங்க தயார் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இந்தியா மட்டுமின்றி பல்வேறு நாடுகளில் ஆன்லைன் வர்த்தகத்தில் கொடிக்கட்டி பறக்கும் அமேசான் நிறுவனம் பொருட்களை வாடிக்கையாளர்களிடம் துரிதமாக கொண்டு சேர்ப்பதற்காக புதிய திட்டங்ககளை கையிலெடுத்துள்ளது. அதற்காக தற்போது கைகளால் பொருட்களை பேக்கேஜ் செய்யும் ஊழியர்களுக்கு பதிலாக இயந்திரங்களைப் பயன்படுத்த அமேசான் முடிவு செய்துள்ளது. இயந்திரங்கள் மூலம் மணிக்கு 700 பெட்டிகள் வரை பேக்கேஜ் செய்ய முடியும் என்றும் மனிதர்களால் இயந்திரத்தின் வேகத்திற்கு பணியாற்ற முடியாது என்றும் தெரிவித்துள்ளது.

amazon

இதனால் அமெரிக்காவில் உள்ள தலைமை அலுவலகத்தில் பேக்கிங் பிரிவில் பணி புரியும் ஊழியர்களை ராஜினாமா செய்யும் படி கோரிக்கை விடுத்துள்ளாது. அதுமட்டுமின்றி பணியை ராஜினாமா செய்தால் சுயதொழில் தொடங்க நிதியுதவி வழங்குவதாகவும் அமேசான் தெரிவித்துள்ளது. இந்தத் திட்டத்தின்படி, வேலையை விடுவதற்கு ஒப்புக்கொள்ளும் ஊழியர்களுக்கு உதவித் தொகையாக 7 லட்சம் ரூபாயும், 3 மாத சம்பளமும் வழங்குவதாக அமேசான் தெரிவித்துள்ளது. அமேசானின் இந்த முடிவுக்கு பல்வேறு ஊழியர்கள் பச்சைக்கொடி காட்டியுள்ளனர்.