வேலூர் மக்களவை தொகுதியின் தேர்தல் தேதி அறிவிப்பு!

வேலூர் மக்களவை தொகுதியின் தேர்தல் தேதி அறிவிப்பு!

வேலூர் மக்களவை தொகுதியில் தி.மு.க. சார்பில், அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த்தும்,  அ.தி.மு.க. கூட்டணியில் புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி. சண்முகமும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டார்கள். இவர்களை தவிர மேலும் 22 வேட்பாளர்கள் களத்திலிருந்தனர். 

வேலூர் மக்களவை தொகுதியில் வரும் ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி  தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

வேலூர் மக்களவை தொகுதியில் தி.மு.க. சார்பில், அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த்தும்,  அ.தி.மு.க. கூட்டணியில் புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி. சண்முகமும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டார்கள். இவர்களை தவிர மேலும் 22 வேட்பாளர்கள் களத்திலிருந்தனர். 

it raid

இதையடுத்து கதிர் ஆனந்துக்கு சொந்தமான வீடு, அலுவலகம் மற்றும் அவரது உறவினர் இல்லம், குடோன் ஆகியவற்றில் அதிரடியாக வருமானவரி ரெய்டு நடந்தது. இதில்  பதினோரு கோடி ரூபாய்க்கும் மேல் நோட்டுக் கட்டுகள்  சிக்கின. அப்போதே வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செய்யப்படும் என்று ஒரு யூகம் கிளம்பியது.  அதன்படி கட்டுக்கடங்காத பணப்புழக்கம் காரணமாக வேலூர் பாராளுமன்றத் தொகுதி தேர்தல் ரத்து செய்யப்படுவதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்தது.

anand

 இந்நிலையில், வரும் ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி வேலூரில் தேர்தல் நடக்கும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.வரும் 18 ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்றும்  19 ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் பரிசீலனை செய்யப்படும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும்  வேட்பு மனுக்களை திரும்ப பெற  22 ஆம் தேதி கடைசி நாள் என்றும் வாக்குப் பதிவு முடிந்து ஆகஸ்ட் 9 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.