வேலூர் மக்களவை தேர்தல்: ரிசல்ட்டுக்கு முன்பே ஆட்டத்தை ஆரம்பித்த திமுகவினர்; களைகட்டும் அண்ணா அறிவாலயம்!

 

வேலூர் மக்களவை தேர்தல்: ரிசல்ட்டுக்கு முன்பே ஆட்டத்தை ஆரம்பித்த திமுகவினர்; களைகட்டும் அண்ணா அறிவாலயம்!

வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட கதிர் ஆனந்த் வெற்றி பெறும் நிலையில் உள்ள நிலையில் திமுகவினர் கொண்டாட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.  

வேலூர் மக்களவை தேர்தல்: ரிசல்ட்டுக்கு முன்பே ஆட்டத்தை ஆரம்பித்த திமுகவினர்; களைகட்டும் அண்ணா அறிவாலயம்!

வேலூர்: வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட கதிர் ஆனந்த் வெற்றி பெறும் நிலையில் உள்ள நிலையில் திமுகவினர் கொண்டாட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.  

வேலூர் மக்களவைத் தொகுதிக்கு கடந்த 5ஆம் தேதி தேர்தல் நடந்துமுடிந்த நிலையில்  வாக்கு  எண்ணிக்கை  இன்று நடைபெற்றது. இதையொட்டி வாக்கு எண்ணும் மையத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. வாக்குப்பதிவுக்குப் பயன்படுத்தப்பட்ட இயந்திரங்கள் ராணிப்பேட்டையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்ட  நிலையில் மூன்று அடுக்கு பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை ஆரம்பமானது.

ac

 வாக்கு  எண்ணிக்கை ஆரம்பத்திலிருந்து அதிமுக வேட்பாளர் ஏ.சி சண்முகம் முன்னிலை பெற்று வந்தார். இதையடுத்து ஏழாம் சுற்றில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் நீண்ட நேர பின்னடைவுக்குப் பிறகு ஏ.சி சண்முகத்தை பின்னுக்கு தள்ளி முன்னேறினார். தொடர்ந்து முன்னிலை வகித்த கதிர் ஆனந்த்   இறுதியில் வெற்றி பெறும் நிலையில் உள்ளார். இவர்  ஏ.சி.சண்முகத்தை விட 8 ஆயிரத்து ஐநூறுக்கும் அதிகமான வாக்குகள் பெற்று முன்னிலையில் இருக்கிறார்.

இந்நிலையில் கிட்டத்தட்டக் கதிர் ஆனந்த் வெற்றி உறுதி செய்யப்பட்ட நிலையில் அண்ணா அறிவாலயத்தில் திமுக நிர்வாகிகளும் தொண்டர்களும் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.  இன்னும் சில மணிநேரங்களில் வேலூர் தொகுதி தேர்தல் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.