வேலம்மாள் கல்வி குழுமத்தில் 3 நாட்களாக ஐ.டி ரெய்டு : ரூ.532 கோடி வருமானம் மறைப்பு!

 

வேலம்மாள் கல்வி குழுமத்தில் 3 நாட்களாக ஐ.டி ரெய்டு : ரூ.532 கோடி வருமானம் மறைப்பு!

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வேலம்மாள் குழுமம் பள்ளிகள், பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகளை நடத்தி வருகிறது.

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வேலம்மாள் குழுமம் பள்ளிகள், பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகளை நடத்தி வருகிறது. இங்கு நன்கொடை பெறுவதன் மூலம் வரிஏய்ப்பு நடப்பதாக எழுந்த புகாரின் பேரில் வருமான வரித்துறை கடந்த 21 ஆம் தேதி முதல் சென்னை முகப்பேறு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் சோதனை நடத்தி வருகிறது. 

VELAMMAL EDUCATIONAL TRUST

வேலம்மாள் கல்வி குழுமத்தின் 62 இடங்களிலும், இதன் உரிமையாளர் மற்றும் நிர்வாகிகளின் வீடுகளிலும் சோதனை மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ஹார்டு டிஸ்க்குகள், நிலம் வாங்கியது தொடர்பான முக்கிய ஆவணங்கள் சிக்கின. கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த சோதனை இறுதிக் கட்டத்தை எட்டிய நிலையில், ரூ.532 கோடி வருமானம் மறைக்கப்பட்டதும், கணக்கில் வராத 2 கோடி ரூபாய் பணமும் அம்பலமானது. இது குறித்து வருமான வரித்துறையினர் வேலம்மாள் குழும உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகிகளிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.