வேறு பெண்ணை சைட் அடிச்சதால் லேப்டாப்பால் காதலனின் மண்டையை உடைத்த காதலி! வைரலாகும் வீடியோ

 

வேறு பெண்ணை சைட் அடிச்சதால் லேப்டாப்பால் காதலனின் மண்டையை உடைத்த காதலி! வைரலாகும் வீடியோ

காதலன் மீதிருந்த கோபத்தால் கையிலிருந்த லேப்டாப்பை தூக்கி காதலினின் தலையை உடைத்த துணிச்சலான காதலி தற்போது சமூக வலைதளத்தில் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறார்.

காதலன் மீதிருந்த கோபத்தால் கையிலிருந்த லேப்டாப்பை தூக்கி காதலினின் தலையை உடைத்த துணிச்சலான காதலி தற்போது சமூக வலைதளத்தில் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறார்.

மியாமியிலிருந்து லாஸ் ஏஞ்சல்ஸுக்கு அமெரிக்கன் ஏர் லைன்ஸ் விமானத்தில் காதல் ஜோடி ஒன்று சென்றுக்கொண்டிருந்தது. அப்போது காதலன் தொடர்ந்து எதிர்புறம் அமர்ந்திருந்த ஒரு பெண்ணைப் பார்த்துக் கொண்டிருந்தார். அதை பார்த்த காதலி கோபத்தின் உச்சத்துக்கு சென்று கெட்ட வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதனால் அவமானம் தாங்க முடியாத காதலன் விமானத்தை விட்டுக் கீழே இறங்க முடிவு செய்து எழுந்தார். இதனால் ஆத்திரமடைந்த காதலி தன் கையிலிருந்த லேப்டாப்பை எடுத்து அந்த ஆணின் தலையில் ஓங்கி அடித்தார். இதில் படுகாயமடைந்த அந்த நபரை விமான பணி பெண்கள் பத்திரமாக மீட்டு முதலுடவி அளித்தனர். உடனே காதலி அந்த ஆணை பற்றி கவலைப்படாது தான் எடுத்து வந்த பொட்டிப் பைகளை எடுத்துக் கொண்டு கீழே இறங்கிவிட்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.