வேப்பிலையுடன் ஆடல் பாடல்.. கிருமிநாசினி தெளித்துக்கொண்டே விழுப்புணர்வு ஏற்படுத்திய கிராம மக்கள்!

 

வேப்பிலையுடன் ஆடல் பாடல்.. கிருமிநாசினி தெளித்துக்கொண்டே விழுப்புணர்வு ஏற்படுத்திய கிராம மக்கள்!

குறிப்பாக வேப்பிலை,மஞ்சள் உள்ளிட்ட இயற்கையான பொருட்கள் மூலம் உருவான கிருமிநாசினியை தெளித்து வருகின்றனர்.

கிருமிநாசினி மூலம் கொரோனா வைரஸை தடுக்க முடியும் என தெரிவிக்கப்பட்டதில் இருந்து அனைத்து கிராமங்களிலும் தன்னார்வலர்கள் ஊர் முழுவதும் கிருமிநாசினி தெளித்து வருகின்றனர். குறிப்பாக வேப்பிலை,மஞ்சள் உள்ளிட்ட இயற்கையான பொருட்கள் மூலம் உருவான கிருமிநாசினியை தெளித்து வருகின்றனர்.

ttn

இந்நிலையில். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள குமரெட்டியாபுரம் கிராமத்தில் 20 பேர் கொண்ட தன்னார்வலர்கள் குழு இணைந்து வேப்பிலை, பப்பாளி இலை, புங்கை இலை சாறு, மஞ்சள் காப்பு, கோமியம் ஆகிய பாரம்பரியமான கிருமிநாசினிகளை பயன்படுத்தி கிருமி நாசினி தயாரித்துள்ளனர். அவற்றை டிராக்டர்கள் மூலம் கொண்டு சென்று ஊர் முழுவதும் தெளித்துள்ளனர். மேலும், கிருமிநாசினி தெளிக்கும் போது கைகளில் வேப்பிலையுடன் கொரோனா விழிப்புணர்வு பாடல்களை ஸ்பீக்கர்களில் போட்டு விட்டு, ஆடல் பாடலுடன் உற்சாகமாக தெளித்துள்ளனர்.