வேதிகா ஆர்மியின் அட்டகாசம்?

 

வேதிகா ஆர்மியின் அட்டகாசம்?

இளையராஜா 75 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நடனமாட இருக்கும் வேதிகாவுக்கு போன் செய்து விசாரிக்கும் அளவு போயிருக்கிறது வேதிகா ஆர்மி.

சென்னை: இளையராஜா 75 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நடனமாட இருக்கும் வேதிகாவுக்கு போன் செய்து விசாரிக்கும் அளவு போயிருக்கிறது வேதிகா ஆர்மி.

இயக்குனர் பாலாவின் பரதேசி படத்தில் அமைதியான நடிப்பில்  அனைவரையும் கவர்ந்தவர் நடிகை வேதிகா. இவர் தெலுங்கு கன்னடம் என்று தொடர்ந்து பல மொழிகளிலும் நடித்து வருகிறார். அதனால்தான் தமிழில் தொடர்ந்து கவனம் செலுத்த முடியாமல் இருக்கிறார். இவருக்கு டிவிட்டர் பக்கத்தில் தீவிர ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. வேதிகா ஆர்மி என்ற பெயரோடு ஒரு பக்கத்தையும் ஆரம்பித்திருக்கிறார்கள்.

வேதிகா அவ்வப்போது பதிவிடும் புகைப்படங்களுக்கும் ஸ்டேட்டஸ்களுக்கும்  பதில் கொடுத்து வேதிகாவை உற்சாகப்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் இளையராஜா நிகழ்ச்சியில் வேதிகா நாளை நடனம் ஆட இருக்கிறார். இவர் என்ன பாட்டுக்கு ஆடப் போகிறார் என போன் போட்டு கேட்கும் அளவுக்கு போயிருக்கிறது வேதிகா ஆர்மி.