வேட்புமனு தாக்கலின் போது அடாவடி செய்த தம்பிதுரை: கடுப்பான செந்தில் பாலாஜி & கோ

 

வேட்புமனு தாக்கலின் போது  அடாவடி செய்த தம்பிதுரை: கடுப்பான செந்தில் பாலாஜி & கோ

தி.மு.க கூட்டணி சார்பில் கரூரில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதி மணிக்கு வேட்புமனு தாக்கல் செய்ய அனுமதிக்காமல் காலம் கடத்தியதால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது. 

கரூர் : தி.மு.க கூட்டணி சார்பில் கரூரில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதி மணிக்கு வேட்புமனு தாக்கல் செய்ய அனுமதிக்காமல் காலம் கடத்தியதால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது. 

வேட்புமனு தாக்கல்

dmk

மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேர்தல் பிரச்சாரம், வேட்புமனு தாக்கல் என அரசியல் கட்சிகள்  பரபரப்பாக இயங்கி வருகின்றன. அதன்படி திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸின் கரூர்  வேட்பாளர் ஜோதி மணி நேற்று வேட்புமனு தாக்கல் செய்ய சென்றார். அவருக்கு காலை 12.00 மணி  முதல் 1.00 மணி வரை  நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. அதற்கு முன்னதாக 11.00 மணி முதல் 12.00 மணி வரை அ.தி.மு.க. எம்.பியும் தற்போதைய வேட்பாளருமான  தம்பிதுரைக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. 
 

போலீசாருடன் வாக்குவாதம் 

jothimani

அந்தவகையில் கரூர் மாவட்ட செயலாளர் மாவட்ட செயலாளர் செந்தில் பாலாஜி தலைமையின் கீழ், காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி, சரியாக பிற்பகல் 12.00 மணிக்கு வேட்புமனு தாக்கல் செய்ய  ஆட்சியர் அலுவலகம் சென்றார். ஆனால்  அவருக்கு அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. தொடர்ந்து வெளியே காத்திருந்த அவர் நேரம் செல்ல செல்ல, கோபமாகி, ‘ மணி 12.15 ஆகிறது. எங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரமோ 12 மணி. ஆனால்  இதுவரை எங்களை உள்ளே விடாமல் இருக்கிறீர்கள். நாளையோடு வேட்புமனு தாக்கல் முடிவடைகிறதே? என்று அங்கிருந்த போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

லேசான தள்ளுமுள்ளு

 

அப்போது உடனிருந்த செந்தில் பாலாஜியும் உள்ளே செல்ல முற்பட அங்கு லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஆனால்  காவல்துறை தரப்போ, ஜோதி மணி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தபோது, ஏற்கனவே வேட்புமனு தாக்கல் செய்ய வந்த தம்பிதுரை அங்கே இருந்ததால் ஜோதி மணியை  அனுமதிக்கவில்லை என்றனர். 

அடாவடி செய்வது அழகல்ல

thambidurai

இந்த வாக்குவாதமானது அங்கு கூடியிருந்த ஒளிப்பதிவாளர்களின் கேமராவில் சிக்கி கொள்ள வேறு வழியில்லாமல், ஜோதிமணி உள்ளிட்டவர்களைப் பிற்பகல்  12.40 மணியளவில் உள்ளே அனுப்பினர்.  என்னதான் ஆளுங்கட்சியாக இருந்தாலும், குறிப்பிட்ட நேரத்தை கடந்து அடாவடி செய்வது அழகல்ல என்று அங்கிருந்தவர்கள் முணுமுணுத்தது குறிப்பிடத்தக்கது. 

இதையும் வாசிக்க: மக்களவை தேர்தல் 2019; திரிணாமூல் காங்., கட்சிக்கு கமல்ஹாசன் ஆதரவு