வேட்புமனுக்கள் பரிசீலனை நிறைவு – வாபஸ் பெற நாளை கடைசி நாள்

 

வேட்புமனுக்கள் பரிசீலனை நிறைவு – வாபஸ் பெற நாளை கடைசி நாள்

தமிழகத்தில் 40 தொகுதிகளுக்கான மக்களவைத் தேர்தல் மற்றும் 18 சட்டப் பேரவை தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நேற்று நிறைவடைந்துள்ளது.

தமிழகத்தில் 40 தொகுதிகளுக்கான மக்களவைத் தேர்தல் மற்றும் 18 சட்டப் பேரவை தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நேற்று நிறைவடைந்துள்ளது.

1600 மனுக்கள் 

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களில் 1,600-க்கும் மேற்பட்ட மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. இதேபோன்று, 18 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் போட்டியிட 519 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 

தேர்தல்

வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை புதன்கிழமை காலை 11 மணிக்குத் தொடங்கியது. தூத்துக்குடி தொகுதியில் பிரதான கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்களான தமிழிசை செளந்தரராஜன், கனிமொழி ஆகியோரது வேட்புமனுக்கள் சில மணி நேர காத்திருப்புக்குப் பிறகே ஏற்கப்பட்டன. 
இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும், கடலூரில் அமமுக வேட்பாளரின் மனு நிராகரிக்கப்பட்டது. அவருக்குப் பதிலாக மாற்று வேட்பாளரின் மனு ஏற்கப்பட்டது. மற்ற இடங்களில் பெரும்பாலான கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் எந்த சிக்கலும் இல்லாமல் ஏற்றுக் கொள்ளப்பட்டன. 

வாபஸ் பெற நாளை கடைசி நாள் 

வேட்புமனுக்களை வாபஸ் பெற வெள்ளிக்கிழமை மாலை 3 மணி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. வியாழக்கிழமை காலையில் இருந்து வெள்ளிக்கிழமை மாலைக்குள் வேட்புமனுக்களை வாபஸ் பெற்றுக் கொள்ளலாம். வெள்ளிக்கிழமை மாலை 3 மணிக்குப் பிறகு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். அதன்பின், சுயேச்சை வேட்பாளர்களுக்கான சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்படும். 

தேர்தல்

அமமுகவுக்கு பொதுச் சின்னம்

அப்போது, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் சுயேச்சையாகப் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு பொதுவான சின்னம் வழங்கப்படலாம் என்று தேர்தல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. அமமுகவுக்கு பொதுச் சின்னம் ஒதுக்கப்பட்ட பிறகு, பிற சுயேச்சைகளுக்கு சின்னங்கள் அவர்கள் கோரியபடி ஒதுக்கப்பட உள்ளன. இறுதி வேட்பாளர் பட்டியலைத் தொடர்ந்து, தமிழகத்தில் தேர்தல் பிரசார களம் சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

இதையும் படிங்க 

தேர்தலை முன்னிட்டு பொது விடுமுறை; அரசானை வெளியிட்டது தமிழக அரசு!

தமிழிசை சௌந்தரராஜனின் வேட்புமனு பரிசீலனை ஒத்தி வைப்பு – என்ன காரணம் தெரியுமா ?