வேகமெடுக்கும் கஜா புயல்; கடலூர், திருவாரூர் மாவட்டங்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு

 

வேகமெடுக்கும் கஜா புயல்; கடலூர், திருவாரூர் மாவட்டங்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு

கஜா புயல் இன்று மாலை அல்லது இரவில் கரையை கடக்க உள்ள நிலையில், கடலூர், திருவாரூர் மாவட்டங்களுக்கான உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன

கடலூர்: கஜா புயல் இன்று மாலை அல்லது இரவில் கரையை கடக்க உள்ள நிலையில், கடலூர், திருவாரூர் மாவட்டங்களுக்கான உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

 

சென்னைக்கு அருகே 370 கி.மீ தொலைவிலும், நாகைக்கு அருகே 370 கி.மீ தொலைவிலும் மையம் கொண்டுள்ள கஜா புயல், 6 மணி நேரத்தில் அதி தீவிர புயலாக கஜா வலுப்பெறும் எனவும், 8 கி.மீ வேகத்தில் இருந்த கஜா புயலின் வேகம் மணிக்கு 14 கி.மீ வேகமாக அதிகரித்துள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

கஜா புயல் இன்று மாலை அல்லது இரவில் கரையை கடக்கவுள்ள நிலையில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கி விடுக்கப்பட்டுள்ளது. இதனால், பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக கருதப்படும் இடங்களுக்கு மீட்பு குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. கஜா புயலின் தாக்கத்தை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், மீட்புப்பணிகளுக்கு தயார் நிலையில் இருப்பதாகவும் இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.

 

இந்நிலையில், கடலூர், திருவாரூர் மாவட்டங்களுக்கான உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. கடலூர் மாவட்டத்தில் கஜா புயலால் பதிப்பு ஏற்படும் பட்சத்தில் 1077, 04142-220700 /  221113 / 233933 / 221383 ஆகிய அவசர எண்களை தொடர்பு கொள்ளலாம் எனவும்,  107.8 என்ற ரேடியோ அலைவரிசையில் கஜா புயல் குறித்த தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

அதேபோல், திருவாரூர் மாவட்டத்தில் 1077, 04366-226040 / 226050 / 226080 / 226090 ஆகிய எண்களை அவசர உதவிக்கு தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.