வேகமாக பரவும் கொரோனா வைரஸ்….ஏப்ரல் 15ம் தேதி வரை அனைத்து சுற்றுலா விசாக்களும் ரத்து…. மத்திய அரசு நடவடிக்கை….

 

வேகமாக பரவும் கொரோனா வைரஸ்….ஏப்ரல் 15ம் தேதி வரை அனைத்து சுற்றுலா விசாக்களும் ரத்து…. மத்திய அரசு நடவடிக்கை….

வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நோக்கில், ஏப்ரல் 15ம் தேதி வரையிலான அனைத்து சுற்றுலா விசாக்களையும் மத்திய அரசு தற்காலிகமாக ரத்து செய்துள்ளது.

கொரோனா வைரஸ் அல்லது கோவிட்19 உலகம் முழுவதும் தீவிரமாக பரவ தொடங்கியுள்ளது. இந்தியாவிலும் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸ் ஒரு தொற்று நோய் என உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. உலக நாடுகள் கொரோனா வைரஸை பரவுவதை தடுக்க பெரிய போராட்டமே நடத்தி வருகின்றன.

ஹர்ஷ் வர்தன் தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சர்கள் குழு கூட்டம்

நம் நாட்டில் கடந்த சில தினங்களாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், நேற்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தலைமையில் அமைச்சர்கள் குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் கொரோனா வைரஸ் நிலவரம் தொடர்பாக விவாதிக்கப்பட்டது. மேலும் ஏப்ரல் 15ம் தேதி வரை அனைத்து சுற்றுலா விசாக்களையும் தற்காலிகமாக ரத்து செய்யவும் முடிவு எடுக்கப்பட்டது.

விமான நிலையம்

இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தூதரக, அலுவலக, ஐக்கிய நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகள், வேலை வாய்ப்புகள் மற்றும் திட்டங்கள் காரணங்களுக்காக வழங்கப்பட்ட விசாக்களை தவிர்த்து மற்ற அனைத்து சுற்றுலா விசாக்களும் ஏப்ரல் 15ம் தேதி வரை தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது. இது இம்மாதம் 13ம் தேதி (நாளை) முதல் அமலுக்கு வருகிறது என அதில் தெரிவிக்கபட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கில், உலகத்தின் பிற பகுதிகளிலிருந்து தன்னை தானே தனிமைப்படுத்தி கொள்ளும் நடவடிக்கையாக இதனை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது

மருத்துவமனை