வெள்ள நிவாரணப் பணி முதலில், அமைச்சரவை விரிவாக்கம் பிறகு – எடியூரப்பா!

 

வெள்ள நிவாரணப் பணி முதலில், அமைச்சரவை விரிவாக்கம் பிறகு – எடியூரப்பா!

ஒருவரே எத்தனை பணிகளைச் செய்ய முடியும்? உடனடியாக எடியூரப்பா அமைச்சரவையை விரிவாக்கம் செய்யவேண்டும், இல்லையென்றால் நிவாரணப்பணிகளில் தொய்வு ஏற்படும் என காங்கிரஸ் ஒருபக்கம் ‘ரொம்ப’ அக்கறையாக அறிவுரை கூறியுள்ளது. ஆனால், ஆகஸ்ட் 16ஆம் தேதிக்குப் பிறகுதான் விரிவாக்கம் எல்லாம், அதுவரை நானே ராஜா நானே மந்திரி என அறிவுரைக்கு முடிவுரை எழுதிவிட்டார்.

கனமழை, அணைகளில் கரைபுரண்டோடும் வெள்ளம், நிலச்சரிவு, பொதுமக்கள் பாதிப்பு என மஹாராஷ்ட்ரா, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மற்றும் தமிழ்நாட்டின் மேற்குப் பகுதிகள் தத்தளிக்கின்றன. கர்நாடகா, தமிழ்நாடு தவிர்த்து மற்ற மாநிலங்களில் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் களத்தில் இறங்கி வேலைப் பார்க்கின்றனர். காரணம் சேதாரம் அப்படி. ஆனால், கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பவே மொத்தப் பணிகளையும் தலைமேல் தூக்கி சுமந்துகொண்டு அலைகிறார். ஏன்னா அவர்கிட்டதான் மந்திரிகளே இல்லையே. அவசர அவசரமாக முதலமைச்சராக பதவியேற்ற உடனேயே கடுமையான வெள்ளப் பாதிப்புகளை பார்வையிடுவதும், நிவாரணப்பணிகளுக்கு உத்தரவிடுவதும், இடையிடையே மஹாராஷ்ட்ரா முதல்வருக்கு கடிதம் எழுதுவதுமாக எடியூரப்பா ரொம்ப பிசி.
 

Flood affected Karnataka

ஒருவரே எத்தனை பணிகளைச் செய்ய முடியும்? உடனடியாக எடியூரப்பா அமைச்சரவையை விரிவாக்கம் செய்யவேண்டும், இல்லையென்றால் நிவாரணப்பணிகளில் தொய்வு ஏற்படும் என காங்கிரஸ் ஒருபக்கம் ‘ரொம்ப’ அக்கறையாக அறிவுரை கூறியுள்ளது. ஆனால், ஆகஸ்ட் 16ஆம் தேதிக்குப் பிறகுதான் விரிவாக்கம் எல்லாம், அதுவரை நானே ராஜா நானே மந்திரி என அறிவுரைக்கு முடிவுரை எழுதிவிட்டார். கர்நாடக பாஜக ஏற்கெனவே அமைச்சரவை விரிவாக்கம் குறித்து முடிவு எடுத்துவிட்டதாகவும், இறுதி முடிவை அமித் ஷா ஆகஸ்ட் 16ஆம் தேதி எடுப்பார் எனவும் தெரியவருகிறது. காங்கிரஸின் ஆர்வத்துக்கும் காரணம் இல்லாமல் இல்லை. அமைச்சரவையில் இடம் கிடைக்காத வருத்தத்தில்தான் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதாதள எம்.எல்.ஏக்கள் பாஜக மகுடிக்கு ஏற்றவாறு ஆடினர். எவ்வளவுதான் முயற்சி செய்தாலும், எடியுரப்பாவால் 33 பேருக்குதான் அமைச்சரவையில் இடம் தர முடியும்,  அப்புறம் எங்க அரசியலை பார்க்காத்தானே போறீங்க என காங்கிரஸ் காத்திருக்கிறது.