வெள்ளை சர்க்கரைக்கு குட் பை சொல்லுங்க… ‘வெல்லக்கட்டி’யான தகவல்..!

வெள்ளை சர்க்கரைக்கு குட் பை சொல்லுங்க… ‘வெல்லக்கட்டி’யான தகவல்..!

பனிக்காலம் வந்தாலே சளி, இருமல், ஜூரம்  போன்றவைகளால் பலரும் அவதிக்குள்ளாவதை நாம் பார்த்திருப்போம். வழக்கத்தைவிட பனி பெய்வதால் நோய் தொற்றும் அதிகம் இருக்கும். உடல் ஆரோக்கியமாக இருப்பவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்களுக்கு பிரச்சினை இல்லை. நோஞ்சானாக இருப்பவர்கள், அதிக உடல் உழைப்பு இல்லாத ஆட்களுக்கும் வயதானவர்களுக்கும்தான் இது பிரச்சினை! அப்படிப்பட்டவர்களுக்கு உடனடியாக நோய் எதிர்ப்பை அதிகரிக்க செய்கிறது நம் கிராமங்களில் கிடைக்கும் நாட்டு வெல்லம்! இயக்கை நமக்கு எவ்வளவோ கொடைகளைக் கொடுத்திருக்கிறது. நாம் தான் அதை தேடித் கண்டுபிடிக்காமல் விட்டுவிடுகிறோம்.

சர்க்கரையை தவிர்த்து இயற்கையான வெல்லத்திற்கு மாறுங்கள் என்று பலமுறை சொன்னாலும் இன்னும் செயற்கை சர்கரையை உபயோகித்து மருத்துவமனைகளுக்கு காசை கொட்டிக்கொடுப்பவர்கள் இந்த ஆச்சர்ய தகவலைத் தெரிந்த பின் கண்டிப்பாக நாட்டு வெல்லத்திற்கு வெல்கம் சொல்வீர்கள் என்பதில் மாற்றம் இல்லை!  

White Sugar

பனிக்காலம் வந்தாலே சளி, இருமல், ஜூரம்  போன்றவைகளால் பலரும் அவதிக்குள்ளாவதை நாம் பார்த்திருப்போம். வழக்கத்தைவிட பனி பெய்வதால் நோய் தொற்றும் அதிகம் இருக்கும். உடல் ஆரோக்கியமாக இருப்பவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்களுக்கு பிரச்சினை இல்லை. நோஞ்சானாக இருப்பவர்கள், அதிக உடல் உழைப்பு இல்லாத ஆட்களுக்கும் வயதானவர்களுக்கும்தான் இது பிரச்சினை! அப்படிப்பட்டவர்களுக்கு உடனடியாக நோய் எதிர்ப்பை அதிகரிக்க செய்கிறது நம் கிராமங்களில் கிடைக்கும் நாட்டு வெல்லம்! இயக்கை நமக்கு எவ்வளவோ கொடைகளைக் கொடுத்திருக்கிறது. நாம் தான் அதை தேடித் கண்டுபிடிக்காமல் விட்டுவிடுகிறோம்.

Jaggery

வெல்லத்தின் நன்மைகள்:

1. வெல்லம் ஒரு சிறந்த எதிர்ப்பு சக்தியை தரும் ஒன்று. இதில் அதிகமான ஆன்டி ஆக்சிடன்ட்ஸ், மினெரல்ஸ், வைட்டமின்ஸ், இருப்பதால் உடலுக்கு நோய் தோற்று ஏற்படாமல் காக்கும்.மேலும் இது உடலினை உள்ளிருந்து சூடாக வைத்துக்கொள்ள உதவும்.குளிர் அதிகம் இருந்தாலும் உடல் அதை தாங்கும்.

2. வெல்லத்தை தொடர்ந்து சாப்பிடுவதால்  உடலுக்கு மட்டுமன்றி உங்கள் முகத்திற்கும், கூந்தலின் வளர்ச்சிக்கும் நன்கு உதவும்.

3. லிவரை சுத்தப்படுத்துவதற்கு, ரத்த நாளங்களை, மேலும் இது உடலினை உள்ளிருந்து சூடாக வைத்து ரத்த ஓட்டம் சீராக அமைவதற்கும் வெல்லம் பெரிய பங்காற்றுகிறது.

4. வெல்லம் பனிக்காலத்தில் ஏற்படும் தொண்டை எரிச்சலை போக்குவதோடு, ஒரு சீரான நிவாரணத்தையும் தரும்.

5. தண்ணீருடன் வெல்லம் கலந்து குடிப்பதால் சளி, இருமல் போன்றவை குணமாகும்.

6. சாப்பிட்டவுடன் சிறிது வெல்லத்தை வாயில் போட்டு சப்பி உமிழ் நீரோடு சேர்த்து விழுங்கினால் எளிதில் செரிமானம் ஆகும்.மேலும், வாயு பிரச்சனை அசிடிட்டியையும் நீக்கும். 

7. சாப்பிட்டவுடன் இனிப்பு பதார்த்தத்தை சாப்பிட தூண்டும் குறிப்பாக சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் சர்க்கரை ஏற்றத்தையும்  வெல்லம் தணிக்கும் ஆற்றல் கொண்டது. அதற்காக, அதிகமாக வெல்லத்தை சாப்பிடுதம் தவறு.’அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு’ என்ற பழமொழியை நினைவில் வைத்து உணவினை உண்ணவேண்டும். 

இந்த குளிர்காலத்தில் வெல்லத்தை பயன்படுத்தி இனிப்புகளை செய்து உங்கள் வாழ்க்கையை நோயின்றி இனிதே காத்துக்கொள்ளுங்கள்!