‘வெள்ளையன்’ என் மகன் மாதிரி…அவன் ஏன் தாண்டி போனான் தெரியுமா? உரிமையாளர் சொல்லும் சீக்ரெட்!

 

‘வெள்ளையன்’ என் மகன் மாதிரி…அவன் ஏன் தாண்டி போனான் தெரியுமா? உரிமையாளர் சொல்லும் சீக்ரெட்!

சீறிவந்த காளை தன் ஆவேசத்தை அடக்கி அவர்களைத் தாண்டி சென்றது. இந்த காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலானது.   

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே சிராவயல் மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. அதில் சீறிவந்த காளை ஒன்று   மைதானத்திலிருந்து  ஆவேசமாக ஓடி வர பெண் ஒருவர் தனது குழந்தைகளுடன் எதிரே வந்தார். காளையை கண்டதுடன் அந்த தாய் குழந்தைகளுடன் பயந்து நடுங்க,  சீறிவந்த காளை தன் ஆவேசத்தை அடக்கி அவர்களைத் தாண்டி சென்றது. இந்த காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலானது.   

tttn

இந்நிலையில் இதுகுறித்து காளையின்  உரிமையாளர் சுந்தரம்  பேட்டி அளித்துள்ளார். அதில், ‘நான்  புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே தச்சம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவன். என் காளையின்  பெயர் செல்வம் என்கிற வெள்ளையன்.

ttn

வெள்ளையனுக்கு 6 வயது. பொதுவாக வெள்ளையனை  மஞ்சு விரட்டு, ஜல்லிக்கட்டுக்கு அழைத்து செல்வேன். அதன்படி  கடந்த சில நாட்களுக்கு முன்பு சிராவயல் மஞ்சுவிரட்டு போட்டியில் அவிழ்த்து விடப்பட்டது .

ttn

அப்போது சீறி பாய்ந்து சென்ற எனது காளை பெண் மற்றும் அவரின் குழந்தைகளைப் பார்த்துத் தாண்டி சென்றது மிகவும் பிரமிப்பாக இருந்தது. நான் வெள்ளையனை என் மூன்றாவது மகனாக தான் நினைக்கிறேன்.

ttn

அது என் வீட்டு  பெண்கள் என்று நினைத்து அந்த பெண்ணை தாண்டி  சென்றது என்று நினைக்கிறேன். இது என் குலதெய்வத்தின் செயல்’ என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.