வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கடையிலிருந்த புதிய ஆடைகளை வழங்கிய வியாபாரி!

வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கடையிலிருந்த புதிய ஆடைகளை வழங்கிய வியாபாரி!

கேரளாவில் பக்ரீத் விற்பனைக்காக வைத்திருந்த புதிய ஆடைகளை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கியுள்ள கடை உரிமையாளரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கேரளாவில் பக்ரீத் விற்பனைக்காக வைத்திருந்த புதிய ஆடைகளை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கியுள்ள கடை உரிமையாளரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கேரளாவில் இடைவிடாமல் பெய்துவரும் கனமழையால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, மக்கள் வாழ்வாதரங்களை இழந்து தவித்து வருகின்றனர். மேலும் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு 70க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்ட மக்கல் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 

Noushad

இந்நிலையில்  எர்ணாகுளம் மாவட்டம் மாட்டான்சேரி பகுதியில் வசித்துவரும் துணி வியாபாரி நவுசாத், தனது கடையில் இருந்த புதுத் துணிகளை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வழங்கியுள்ளார். இந்த உலகைவிட்டு நாம் போகும்போது எதையும் எடுத்துச் செல்லப்போவதில்லை. தேவையானவர்களுக்கு உதவி செய்வதைத்தான் நான் விரும்புகிறேன். என்னுடைய பக்ரீத் கொண்டாட்டம் இதுபோன்று கழிகிறது என தெரிவித்துள்ளார். நவுசாத்தின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.